புதிதாக உருவாகின செங்கல்பட்டு, தென்காசி மாவட்டங்கள்! ஏன் உருவானது தெரியுமா? எடப்பாடியின் மாஸ்டர் பிளான்!

தமிழகத்தில் புதிதாக செங்கல்பட்டு, தென்காசி ஆகிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.


இதற்குப் பின்னணியில் உள்ளாட்சித் தேர்தல் இருப்பதாக செய்திகள் உலா வருகின்றன. நெல்லையில் இருந்து பிரிந்து தென்காசி தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என்றும் காஞ்சிபுரத்தில் இருந்து பிரிந்து செங்கல்பட்டு தனி மாவட்டமாக உருவாக்கப்படும் எனவும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார். மேலும், புதிய மாவட்டங்களுக்கு 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என அறிவித்துள்ள நிலையில், தற்போது மேலும் 2 மாவட்டங்கள் உதயமாகியுள்ளன. இதை தொடர்ந்து தமிழகமாவட்டங்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிரவும் மேலும் சில மாவட்டங்கள் பற்றிய அறிவிப்பு வெளிவர உள்ளதாக தெரிகிறது. இது எல்லாமே நிர்வாக வசதிக்கு என்று சொல்லப்பட்டாலும், உள்ளாட்சித் தேர்தலுக்கு இவை பயன்படும் என்று கருதப்படுகிறது.

அதாவது மீண்டும் வார்டு வரையறை, தொகுதி பிரிப்பு போன்ற பணிகள் மேற்கொள்ளும் சூழல் உண்டாகும் என்பதால், தள்ளிப்போட முடியும் என்கிறார்கள். நல்லா இருக்குப்பா அரசியலு...