சிசேரியன் டெலிவரி எப்போது தொடங்கியது தெரியுமா?

சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் நடைமுறை உலகில் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கியதாக கருதப்படுகிறது. ரோமானிய பேரரசர் சீசர் அறுவை சிகிச்சை மூலம் பிறந்தவர் என்பதாலே, அவரது பெயரால் சிசேரியன் என்று அழைக்கப்படுவதாக சொல்லப்படுவதுண்டு. சிசேரியன் எப்போது மேற்கொள்ளப்படும் என்பதை பார்க்கலாம்.


பொதுவாக கர்ப்பிணியின் உடல்நலனை கணித்து சிசேரியன் செய்யவேண்டிய முடிவு முன்கூட்டியே எடுக்கப்படுகிறதுஅதனால் சிசேரியனை, முன்பே தீர்மானிக்கப்பட்டது மற்றும் அவசரகாலத்தில் எடுக்கப்பட்டது என இரண்டு பிரிவாக பிரிக்கலாம்.

பெல்விஸ், பேசேஜ், பவர் மற்றும் பாசெஞ்சர் எனப்படும் நான்கும் சரியாக இருக்கும்பட்சத்தில் சுகப்பிரசவம் சாத்தியமாகிறதுபெல்விஸ் எனப்படுவது இடுப்பு எலும்பு, பாசேஜ் எனப்படுவது கர்ப்பப்பையில் இருந்து குழந்தை வெளியேறும் பாதை, பவர் என்பது பிரசவ வலி ஏற்படும் நேரத்தில் கொடுக்கப்படும் அழுத்தம்.

பாசெஞ்சர் என்று சொல்லப்படுவது குழந்தை. இந்த நான்கு அம்சங்களும் மிகச்சரியாக இருக்கும் வரை சிசேரியன் தேவைப்படுவது இல்லை. இந்த நான்கில் ஏதேனும் ஒன்றில் குறை இருக்கும்பட்சத்தில் சிசேரியன் பரிந்துரைக்கப்படலாம்.