வலியை அலட்சியப்படுத்தினால் என்ன ஆபத்து வரும்னு தெரியுமா?

அலட்சியப்படுத்துதல், பாராமுகம் காட்டுதல், உணர்வுகளை கண்டுகொள்ளாமை போன்றவை காரணமாக உடல் வலி ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெண்களைப் போலவே ஆண்களும் இந்த உணர்வுகளால் பாதிப்படைந்து முதுகுவலி, இடுப்புவலி, தசைப் பிடிப்பால் அவதிப்படுகிறார்கள் என்பதுதான் ஆய்வின் முடிவு.


*வியன்னாவைச் சேர்ந்த மருத்துவ ஆய்வாளர்கள் வலியால் பாதிக்கப்பட்ட 50 பெண்களையும் 25 ஆண்களையும் தொடர்ந்து ஆய்வு செய்துவந்தார்கள். இவர்களில் 30 சதவிகிதம் பேருக்கு வலி ஏற்படுவதற்குக் காரணமாக வாழ்க்கைத் துணையின் அலட்சியம் அமைந்துள்ளதைக் கண்டறிந்தார்கள்.

*துணையினால் அக்கறை செலுத்தப்படாத நிலை, தொடர்ந்து அலட்சியம் செய்வது போன்றவை இருபாலாரின் மனதையும் பாதிக்கிறது. மேலும் விட்டுக்கொடுக்காமை, கோபத்துடன் இருத்தல், பேசாமல் புறந்தள்ளுதல் போன்றவை காரணமாகவும் மன விரக்தியும் உடல் வலியும் தோன்றுகின்றன.

ஒருவருக்கு ஒருவர் நம்பிக்கை வைப்பதும், அன்பை வெளிக்காட்டுவதும், ஒருவர் சொல்வதை மற்றவர் முழுமையாகக் கேட்பதும்தான் குடும்ப உறவை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறது. வலியினால் பாதிக்கப்படுபவருக்கு மருந்து மட்டும் குணம் தருவதில்லை... குடும்ப நிம்மதியும் முக்கியம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.