காந்தியின் குரங்கு பொம்மையைப் பார்த்து ட்ரம்ப் என்ன சொன்னார் தெரியுமா?

ஒருவழியாக ட்ரம்ப் இந்தியாவுக்கு வந்தே சேர்ந்துவிட்டார்.


அமெரிக்க அதிபர் டிரம்ப், அவரது மனைவி மெலனியா ஆகியோர் தனி விமானத்தில் அகமதாபாத் விமான நிலையம் வந்தடைந்தனர்-. விமான நிலையத்துக்கே சென்று வரவேற்றார் ட்ரம்ப் நண்பர் மோடி. விமான நிலையத்தில் ட்ரம்புக்கு அட்டகாசமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன்பிறகு அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து சபர்மதி ஆசிரமம் புறப்பட்டார் அமெரிக்க அதிபர் டிரம்ப். சபர்மதி ஆசிர‌ம‌ம் செல்லும் வழியெங்கும் இந்திய மக்கள் நிறுத்தப்பட்டு இருந்தனர். பல்வேறு கலைஞர்களும், இந்திய கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஒருவழியாக சபர்மதி ஆசிரமத்துக்குப் போனதும் காந்திக்கு மாலையணிவித்து, நூல் நூற்கும் பயிற்சி ட்ரம்புக்கு அளிக்கப்பட்டது. அங்கு காந்தியின் நினைவுகளைப் போற்றிவிட்டு கிளம்பிய ட்ரம்புக்கு காந்தியின் மூன்று குரங்கு பொம்மை குறித்து விளக்கப்பட்டது.

தீயவற்றை பார்க்காதே, தீயவற்றை பேசாதே, தீயவற்றை கேட்காதே என்ற தத்துவம் அந்த பொம்மையில் அடங்கியிருப்பதை மோடி சுட்டிக் காட்டியதும் ட்ரம்ப் மிகவும் ஆச்சர்யமாகிவிட்டார். மோடி சொன்னதை அப்படியே திரும்பிச் சொல்லி, அங்கிருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்திவிட்டார். அந்த அளவுக்கு அந்த பொம்மை ட்ரம்ப் மனதை கவர்ந்துவிட்டதாம்.