காய்ச்சல் வந்துவிட்டால் என்ன சாப்பிட வேண்டும் தெரியுமா?

எல்லா மனிதர்களுக்கும் வருடம் இரண்டு முறையாவது காய்ச்சல் வருவது வழக்கம்தான். காய்ச்சல் வந்ததும் உடனே சாதத்தை நிறுத்திவிட்டு ரொட்டி, பால், பழம் மட்டும் சாப்பிடுவார்கள்.


ஆனால், அரிசி சோறு சாப்பிடுவதுதான் நல்லது என்கிறது மருத்துவம். ஆம், காய்ச்சலின் போது உடலிலிருந்து சக்தி சூடாக வெளியேறுகிறது. அதை ஈடு செய்வதற்கு  போதிய அளவு  போஷாக்கு  உணவு உட்கொள்வது அவசியம்உடலுக்குத் தேவையான சத்துக்கள் சோற்றிலே உள்ளது. அதனால் சோறு சாப்பிடலாம்.

சோறு சாப்பிட விருப்பம் இல்லாதவர்கள் கஞ்சியாக சோற்றை மசித்து குடிக்கலாம். ஏனென்றால், காய்ச்சல் நேரத்தில் பலருக்கு வாய்க்கசப்பு உண்டாகும். அதனால் கஞ்சியாக சாப்பிடுவது எளிதாக இருக்கும்.

எனவே  எந்த நேரத்திலும், எந்த நோயின் போதும் சோறு சாப்பிடலாம். சோறு சாப்பிடுவதால் எந்த நோயும் அதிகரிக்கப் போவதில்லை. அது தீண்டத்தகாத உணவல்ல. ஆனால், அளவுக்கு மிஞ்சினால் எதுவுமே ஆபத்து என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்