உங்களுக்கு தோல் உரிகிறதா? நீங்கள் வளர்கிறீர்கள் என நம்பிக் கொண்டிருக்கிறீர்களா?

பொதுவாக இவ்வாறு தோல் உரிந்தால் அவர்கள் வளர்க்கிறார்கள் என்பது மக்களிடையே நிலவும் மூடநம்பிக்கையாகும். உண்மையில் உங்கள் உடலில் தோல் உரிவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சிலசமயம் இவ்வாறு தோல் உரிவது சில நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம்.


தோல் உரிவதற்கு பொதுவான முக்கிய காரணம் சரும ஒவ்வாமை ஆகும். இதற்கு காரணம் உங்களின் மேக்கப் சாதனங்கள், நீங்கள் உபயோகிக்கும் சோப் என எது வேண்டுமென்றாலும் காரணமாக இருக்கலாம். இதனால் உங்களுக்கு சிறிது எரிச்சல், அரிப்பு போன்றவை ஏற்படலாம் இறுதியில் இதனால் தோல் உரியத் தொடங்கும்.

கடுமையான வெப்பம் உங்கள் சருமத்தின் மேல் அடுக்கை சிதைக்கக்கூடும். அதனால்தான் வெயில்காலம் தொடங்கிய சில நாட்களில் உங்கள் சருமம் உரிய தொடங்குகிறது. 

தோல் உரிவு ஏற்படுவதற்கு மற்றொரு  முக்கிய காரணம் வறட்சியான சருமம் ஆகும். நீங்கள் இயற்கையாகவே வறண்ட சருமத்தை கொண்டவராக இருக்கலாம், குளிர், வானிலை மாற்றங்கள் போன்றவை வெளிப்புற காரணங்களாக இருக்கும்.

இந்த நோய்த்தொற்றுகள் எளிதில் பரவக்கூடியவை. ஏனெனில் இவை அனைத்து வகையான காலநிலைகளிலும் பரவக்கூடியவை. பலரும் உபயோகிக்கும் பொது இடங்களில் இருந்தே இவை எளிதாக பரவுகிறது. இந்த பூஞ்சை தொற்றுக்கு பொதுவான பெயர் ரிங்வார்ம் ஆகும். இது சருமத்தில் வட்ட வடிவத்தில் நமைச்சலாக ஆரம்பிக்கும், தொடக்க நிலையிலேயே கவனிக்காமல் விட்டால் இது தொடர்ந்து தோல் உரிவதற்கு காரணமாக மாறிவிடும்.

பொதுவாக முழங்கைகள் மற்றும் முழங்கால்கள் போன்ற உடலின் மடிப்புகளில் சிவந்த சருமம், நமைச்சல், அரிப்பு, தோல் உரிவது போன்றவை ஏற்படும். எனவே தோல் உரிந்தால் அதனை அலட்சியமாக விடாமல் உடனடியாக சரும மருத்துவரை அணுகுவது நல்லது.