வானவியல் மேதை மயில்சாமி அண்ணாதுரைக்கு ஜோதிடத்தின் மீது அவ்வளவு நம்பிக்கை! ஏன் தெரியுமா?

இப்போது ராக்கெட் ஏவுவதற்குக்கூட நல்ல நேரம் பார்க்கப்படுகிறது என்று நம்புபவர்கள் உண்டு. காற்றடிக்கும் திசை, வேகம் போன்ற பருவகாலத்தை மட்டுமே பார்த்து ராக்கெட் அனுப்பப்படுகிறது.


இந்த நிலையில் ஜோதிடம் என்பது அறிவியலா? வானத்தில் உள்ள கோள்களைக் கொண்டு சொல்லப்படும் ஜோதிடத்தை எவ்வளவு தூரம் நம்பலாம் என்று கேடகப்பட்டதற்கு அண்ணாதுரை சொன்ன பதில் இதுதான். 

இந்தக் கேள்விக்கு என்னுடைய சொந்தக் கருத்தைச் சொல்கிறேன். நான் என்னுடைய பதினொன்றாவது வகுப்புத் தேர்வுக்கான முடிவுக்காகக் காத்துக் கொண்டிருக்கி றேன். அப்போது ஒரு சோதிடர் எனக்குச் சோதி டம் பார்த்துவிட்டு என்னுடைய அப்பாவிற்கு மேலே உனக்குப் படிப்பு இல்லை என்று சொன்னார். என்னுடைய அப்பா பத்தாவது வரை படித்திருக்கிறார். அவர் அன்றைக்குச் சொன்னது.

நான் எஸ்.எஸ். எல்.சிக்கு மேலே தேற மாட்டேன். அது எந்த அளவிற்கு பலித்திருக்கிறது என்பது இப்போது உலகத் திற்கே நன்றாகத் தெரியும். அன்று அந்த எஸ்.எஸ். எல்.சி. தேர்வில் எங்கள் கல்வி மாவட்டத்திலேயே முதல் மாணவனாக வந்தேன். ஆக என்னுடைய அனுபவத்தில் சோதிடம் என்பது ஒன்றுமேயில்லை. அறிவியல் பூர்வமாகப் பார்த்தால் சோதிடமும், வானியலும் ஒன்று இல்லை. அறிவியல் படி அது சரியில்லை என்பது என்னுடைய கருத்து.