தமிழகத்தில் எந்தெந்த தொகுதியில் பணம் கொடுக்கப்போறாங்க தெரியுமா? டெல்லி ரிப்போர்ட்!

தேர்தல் ஆணையம் சார்பில் இந்தியா முழுவதும் எத்தனை தொகுதிகளில், வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்பட இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள ஒரு ரகசிய ஆய்வு எடுப்பதற்கு தனியார் நிறுவனம் நியமிக்கப்பட்டது.


அந்த தனியார் நிறுவனம் ஆய்வு அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்துவிட்டது. அதன்படி இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 115 தொகுதிகளில் பணம் தரப்பட இருப்பதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

இந்த 115 தொகுதிகளில் நம் தமிழகத்தில் எத்தனை தொகுதிகள் இடம்பெற்றுள்ளது என்பது தெரிந்தால், தமிழர்களாகிய நாம் காலரை தூக்கிவிட்டுக் கொள்ளலாம். ஆம், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் பணம் பழங்க இருக்கிறது என்று உறுதியான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே வாக்காளர்களே, நமக்கு வருமா வராதா என்றெல்லாம் சங்கோஜப்பட வேண்டிய அவசியம் இல்லை. எல்லா கட்சிகளும் அள்ளித்தரப் போறாங்க, ரெடியா இருங்க. ஓட்டுக்கு காசு வாங்குறது தப்பா, தப்பில்லையா என்றெல்லாம் யோசிக்காதீங்க... உங்க பணம்.. வாங்குங்க.