கை கழுவும் பழக்கத்தை உருவாக்குவது எப்படி? என்ன நன்மைன்னு தெரியுமா?

கைகளை சுத்தமாக கழுவுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமாகும். நோய் வராமல் பாதுகாப்பது மட்டுமின்றி, நோய் பிறருக்கு பரவாமல் தடுப்பதற்கும் கை கழுவுதல் அவசியமாகும். குழந்தைகளுக்கு பழக்கப்படுத்த வேண்டிய விஷயங்கள்.


• உணவு சாப்பிடும் முன்னரும் சாப்பிட்ட பிறகும் கைகளை சோப்பு போட்டு கழுவவேண்டும்.

• மல, ஜலம் கழித்தபிறகு, தும்மல், இருமல், மூக்குச்சீறல் செய்தபிறகு கைகளை கண்டிப்பாக கழுவ வேண்டும்.

• மணலில் அல்லது வெளியே விளையாடியபிறகு, காயங்களை தொட்டபிறகு, மருந்து தடவிய பிறகு கைகழுவுதல் அவசியம்.

• நாய், பூனை போன்ற வீட்டு விலங்குகளை செல்லம் கொஞ்சியபிறகு கண்டிப்பாக கைகளை கழுவ வேண்டும்.

தண்ணீரில் கைகளை நனைப்பது மட்டும் போதாது. கைகளை ஒன்றோடு ஒன்று தேய்த்து விரல் இடுக்குகள், நகங்கள் உட்பட கைமுழுவதையும் சுத்தம் செய்ய வேண்டும். கைகளை கழுவியதும் சுத்தமான துண்டு அல்லது பேப்பர் கொண்டு துடைக்க வேண்டும்.