தூங்க அடம்பிடிக்கும் குழந்தைகளை எப்படி சமாளிக்கவேண்டும் என்று தெரியுமா?

பொதுவாக சின்னக் குழந்தைகள் எந்தக் கவலையும் இன்றி நிம்மதியாக தூங்குவது வழக்கம். ஆனால் ஒருசில பிள்ளைகள் தூங்காமல் அடம் பிடிப்பதுண்டு. இதற்கு சரியான காரணத்தை கண்டறிந்து நிவர்த்தி செய்யவேண்டுமே தவிர, அடித்து தூங்க வைப்பது சரியல்ல.


• இருட்டைக் கண்டு குழந்தை பயப்படுவதற்கு வாய்ப்பு உண்டு. அதனால் குழந்தைக்கு விபரம் தெரியும்வரை இரவு விளக்கு இருக்கட்டும்.

• குளிர், வியர்வை, அசெளகரியமான படுக்கை போன்றவையும் தூக்கமின்மைக்கு காரணமாக இருக்கலாம். 

• அடிக்கடி கனவு கண்டு விழித்து அழுவதற்கு வாய்ப்பு உண்டு. அதனால் குழந்தைக்கு இனிமையான சூழல் உருவாக்கி, பாட்டுப்பாடி அல்லது கதைகள் சொல்லி தூங்கவைக்க வேண்டும்.

• தாய் வேறு அறையில் தூங்குவதாக இருக்கலாம். தான் தூங்கினால் தாய் காணாமல் போய்விடுவாள் என்ற பயம் காரணமாகவும் குழந்தை விழித்துக்கொண்டே இருக்கலாம்.

இவை தவிர உடல் நலமின்மை, வயிற்றுப் பசி போன்றவையும்கூட, தூக்கம் வராமைக்கு காரணமாக இருக்கலாம். சரியான காரணத்தை கண்டறிந்து நிம்மதியான உறக்கத்துக்கு வழிவகை செய்யவேண்டும்.