விஷப்பூச்சி கடித்து இறந்த குடும்பத்திற்கு எடப்பாடி நிதியுதவி…யாருக்கெல்லாம் உதவின்னு தெரியுமா?

இன்று பல்வேறு இயற்கை நிகழ்வுகளில் மரணம் அடைந்த குடும்பத்தினருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலா 1 லட்சம் ரூபாய் அறிவித்துள்ளார். யாரெல்லாம் இதன் மூலம் பயனடைகிறார்கள் தெரியுமா?


திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், கீழவீரராகவபுரம் கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து என்பவரின் மகன் ஐயப்பன் என்பவர் தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற போது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். 

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், கழனிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் சுப்பிரமணியன் என்பவர் விஷப்பூச்சி கடித்து உயிரிழந்தார். 

மதுராந்தகம் வட்டம், வடக்குபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த முரளி என்பவரின் மகன் சிறுவன் தரணேஷ், ரவி என்பவரின் மகன்கள் சிறுவன் ராஜா மற்றும் சிறுவன் ஆகாஷ் ஆகிய மூன்று சிறுவர்கள் குளத்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம், பனப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் செல்வன் கோவர்தனன் என்பவர் சுற்றுலா சென்ற இடத்தில் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தார்.

சோளிங்கர் வட்டம், புதூர் மதுரா மாலையமேடு கிராமத்தைச் சேர்ந்த தேசன் என்பவரின் மகள் அஷ்வினி, சங்கர் என்பவரின் மகன் செல்வன் தமிழரசன் மற்றும் உலகநாதன் என்பவரின் மகள் செல்வி ஜெயஸ்ரீ ஆகிய மூவரும் வேடந்தாங்கல் ஏரியில் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம், குளக்காட்டாங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்பவரின் மகன் பாண்டீஸ்வரன் என்பவர் ஆற்றில் குளிக்கும் போது, நீரில் மூழ்கி உயிரிழந்தார். கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் வட்டம், முஞ்சிறை கிராமத்தைச் சேர்ந்த விஜீமோன் என்பவர் இயக்கிய இயந்திரத்தின் மீது பாறை விழுந்ததில், பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கிள்ளியூர் வட்டம், மிடாலம் கிராமத்தைச் சேர்ந்த வின்சென்ட் என்பவரின் மகள் செல்வி விர்ஜின் பெர்னதெத் என்பவர் தனியார் வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம் மற்றும் கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவரின் மகன் ராமச்சந்திரன் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார். சிவகாசி வட்டம், தாயில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துகண்ணன் என்பவரின் மகன் கார்த்திகேயன் என்பவர், இயற்கை உபாதை கழிக்கச் சென்ற போது, எதிர்பாரத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தார்.  

வெம்பக்கோட்டை வட்டம், கங்கர்செவல் கிராமத்தைச் சேர்ந்த திருமதி சுப்புலட்சுமி என்பவரின் கணவர் திரு. சேதுராஜ் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், அரியப்பம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் என்பவரின் மகன் நவீன்குமார் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார். சத்தியமங்கலம் வட்டம், புஞ்சைபுளியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவகணேஷ் என்பவரின் மகன் சிறுவன் கவியாணேஷ் என்பவர் பள்ளி வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். 

ஈரோடு வட்டம், வீரப்பன்சத்திரம் கிராமத்தைச் சேர்ந்த குமார் (லேட்) என்பவரின் மகன் மணிகண்டன் என்பவர் திருமூர்த்தி அணையில் குளிக்கச் சென்ற போது, நீரில் மூழ்கி உயிரிழந்தார். சத்தியமங்கலம் வட்டம், சுங்ககாரன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அய்யாவு என்பவரின் மகன் ரங்கசாமி என்பவர் தீ விபத்து ஏற்பட்டு உயிரிழந்தார்.

அந்தியூர் வட்டம், முகாசிபுதூர் கிராமத்தைச் சேர்ந்த நல்லாக்கவுண்டர் என்பவரின் மகன் ரத்னகுமார் என்பவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம், மாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த திருமதி சிவசங்கரி மற்றும் அவரது கணவர் கணேசன் ஆகிய இருவரும் சாலை விபத்தில் உயிரிழந்தனர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், கழுவன்குளம் கிராமத்தைச் சேர்ந்த தனபாலன் என்பவரின் மகன் செல்வன் நவீன் மற்றும் முருகன் என்பவரின் மகன் செல்வன் சபரிதரன் ஆகிய இருவரும் ஊரணியில் மூழ்கி உயிரிழந்தனர்.

அரியலூர் மாவட்டம் மற்றும் வட்டம், பனங்கூர் கிராமத்தைச் சேர்ந்த . கலியபெருமாள் என்பவரின் மகன் ரகுராஜ் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார். சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், கோரணம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அர்த்தனாரி என்பவரின் மகன் செல்வன் மணிகண்டன் என்பவர் விவசாய கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார். மேட்டூர் வட்டம், குட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பச்சமுத்து என்பவரின் மகன் செல்வம் என்பவர் வாகன விபத்தில் உயிரிழந்தார்.

எடப்பாடி வட்டம், செட்டிமாங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் என்பவரின் மகன் உத்திரகுமார் என்பவர் மாடு முட்டி உயிரிழந்தார். மேட்டூர் வட்டம், கூணாண்டியூர் கிராமத்தைச் சேர்ந்த திருமதி ரஞ்சிதா என்பவரின் கணவர் கனகராஜ் (எ) கருமலை என்பவர் கட்டடத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டம், ஒரகடம் பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் கோபி என்பவரின் மகன் செல்வன் விக்னேஷ் என்பவர் உயிரிழந்தார். 

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், கருத்தனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த சாத்தப்பன் என்பவரின் மகன் கோவிந்தராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இப்படி உயிரிழந்தவர்களின் 31 குடும்பத்தினருக்கும் தலா 1 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.