பிக்பாஸ் வீட்டில் பாத்திமா பாபு! ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

பிக்பாஸ் சீசன் 3ல் முதல் போட்டியாளராக களம் இறங்கியுள்ள பாத்திமா பாபுவுக்கு நாள் ஒன்றுக்கு எவ்வளவு சம்பளம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.


தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் ஸ்டார் செய்தி வாசிப்பாளர் எனும் அந்தஸ்தை பெற்றவர் பாத்திமா பாபு. இவர் செய்தி வாசிக்கும் போது அதற்கு என்று ஒரு ரசிகர் வட்டாரமே உண்டு. தற்போது வரை ஜெயா பிளஸ் தொலைக்காட்சியில் இவர் செய்தி வாசித்து வருகிறார். மேலும் இயக்குனர் பாலச்சந்தரின் ஆஸ்தான நடிகையும் கூட இவர்.

அவரது படங்கள் அனைத்திலும் முக்கிய வேடத்தில் பாத்திமா பாபுவுக்கு முக்கிய வேடம் வழங்கப்படும். மேலும் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக நடித்து அசத்தியிருப்பார் பாத்திமா பாபு.

இவர் தான் தற்போது முதல் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். இவருக்கு இதற்கு எவ்வளவு சம்பளம் என்பது தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி ஒரு நாள் வீட்டிற்குள் இருக்க பாத்திமா பாபுவுக்கு சுமார் ஒரு லட்சம் ரூபாய் பேசப்பட்டுள்ளது.

இது தவிர மேலும் சில அலவன்ஸ் உள்ளிட்ட தொகையுடன் சேர்த்து ஒரு நாளைக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரை பாத்திமா பாபுவுக்கு கிடைக்கும் என்று சொல்கிறார்கள். ரசிகர்களை கவரும் பட்சத்தில் இந்த பணம் இரட்டிப்பாகும் என்றும் கூறுகிறார்கள்.