பாஸ்ட்புட் கடைகள் முதல் 5 ஸ்டார் ஹோட்டல் வரை கொடுக்கிற மயோனேஸ் பற்றி தெரியுமா? நம்மை மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டுவது ஏன்?

எங்கே இருந்து வந்தது இந்த மயோனேஸ்? ரோட்டு ஓரம் இருக்குற பாஸ்ட் புட் கடைகள் முதல் 5 ஸ்டார் ஹோட்டல் வரை பயன்படுத்துகிற ஒரு சுவையூட்டி (CONDIMENT).


சாண்ட்விச், பர்கர், வெஜிடேபிள் சாலட் போன்ற எல்லாவற்றிற்கும், மயோனேஸ் தான் அடிப்படை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடும் போது, அதோட மூலப்பொருள் என்ன ? சாப்பிடலாமா கூடாதா? நல்லதா கெட்டதா, இதெல்லாம் பத்தி தெரிஞ்சுக்க வேண்டியது அவசியம்.

பர்கர், பிட்சாவோட சுவை அதிகமா இருப்பதற்கும், மறுபடியும் சாப்பிட தூண்டுவதற்கும் இந்த மயோனேசும் ஒரு காரணம். பாஸ்ட் புட் இல்லாம, சிக்கன் பிரை, லாலி பாப், ஃபிங்கர் பிரை, பிஷ் பிங்கர், என எல்லா எண்ணைல பொரிச்ச வகைகளுக்கும் தொட்டு சாப்பிட மயோனேஸ் பயன்படுத்துறாங்க.

அப்படி அதுல என்ன தான் இருக்கு? எண்ணெய்( ஆலீவ், கடுகு, எடிபில் ஆயில்), முட்டையின் மஞ்சள் கரு, உப்பு, வினிகர் அல்லது எலுமிச்சை சாறு அல்லது கெமிக்கல் ஆசிட் வகைகள் இது எல்லாம் சேர்ந்து எமல்சிபிகேஷன் என்ற வினை மூலமா, வெள்ளை முதல் மஞ்சள் நிறம் வரை, கிடைக்கும் கலவை தான் மயோனேஸ்.

வெஜிடேரியன், வீகன் டயட் இருக்குற மக்களுக்காகவும் கூட முட்டையே சேர்க்காத மயோனேஸ் கிடைக்கிறது. இவ்வகை மயோனேஸ் சாதாரண மயோனேசை விட கெடுதல், முட்டைக்குப்பதிலாக கெமிக்கல் எமல்சிபயர் பயன்படுத்துவதால். மயோனேஸ் வீட்டிலேயே தயாரிக்க முடியும், நல்லதும் கூட ஆனால், சீக்கிரமே கெட்டு போகும் அதை உணர்வது கடினம்.

·சாப்பிட்டால் என்ன செய்யும்? வாரத்திற்கு 3 முறை எடுத்துக்கொள்ளும் போது இதயத்தைப் பாதிக்கும். இதயத்திற்கு அடைப்பு ஏற்படுத்தி ஹார்ட் அட்டாக் வரவைக்கும்.

· மயோனாசின் முக்கியமான மூலப் பொருள் எண்ணெய், சராசரியாக ஒரு மனிதன் சாதாரணமாக எண்ணையைவிட இது 40% அதிகம்.

· ஒரு டேபிள்ஸ்பூன் மயோனேசில் 90 கலோரிகள் கொழுப்பு உள்ளது.

· மயோனேஸ் எடுத்துக்கொள்ளும் போது வயிற்றுப்பகுதியை விரிவடையச்செய்து, நாம் அதிகமாக உணவு எடுத்துக் கொள்ளத் தூண்டுகிறது

· வெறும் காய்கறிகள் மட்டும் வைத்து சாப்பிடும் சான்ட்விச்சை விட மயோனேஸ் டாப்பிங்காக இருந்தால் 2 அல்லது 3 கூட சாப்பிடமுடியும். படிப்படியாக உடல் எடையையும் அதிகரிக்கச் செய்கிறது. நம் உடல் வேலை செய்யும் ஆற்றல் அளவைக் குறைக்கிறது.

தேவை எனில் அளவாக எடுத்துக்கொள்ளலாம்.