பித்தப்பையில் கற்கள் எப்படி வருகிறது? தீர்வு என்ன?

கல்லீரலின் அடிப்பகுதியில் அமைந்துள்ள உறுப்பே பித்தப் பை ஆகும். இதில் உற்பத்தியாகும் பித்த நீரில் கொலஸ்ட்ரால் மற்றும் பல்வேறு உப்புகளின் விகிதம் மாறும்போது, அவை கற்களாக மாறுகின்றன. உடல் பருமனான பெண்களுக்கு இந்தப் பாதிப்பு அதிகம் நிகழ்கிறது.


பித்தக் கற்களால் பித்த நீர்ப் பாதை அடைபடும்போது, வலதுபுற மேல் பகுதியில் வலி உண்டாகும். தொடர்ந்து நெஞ்சின் வலது பகுதியில் வலியும் குமட்டல், வாந்தி, குளிர் காய்ச்சல் போன்றவை ஏற்படலாம்வயிற்றுப் பகுதியை ஸ்கேன் செய்வதன் மூலம் பித்தப்பையின் வீக்கம் மற்றும் கற்களின் எண்ணிக்கையையும் அறிந்துகொள்ள முடியும்.

பித்தப்பையை கற்றிவிடுவதுதான் சிறந்த சிகிச்சை முறையாக அறியப்பட்டுள்ளது. ஆரம்ப காலத்தில் கண்டறியப்பட்ட கற்களை மட்டும் மருந்துகள் மூலம் கரைக்கலாம்.

பொதுவாகவே உடல் எடை அதிகம் உள்ளவர்கள் உணவுக் கட்டுப்பாடுடன் இருந்து கொழுப்புப் பொருட்களை உட்கொள்வதைத் தவிர்த்தால், பித்தப்பை கற்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம். 40 வயதைத் தாண்டிய பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள்.