விளையாட்டு வீரர்களுக்கு வீடுதான் இனி ஜிம்..! கொரோனாவுக்குப் பயந்து பயிற்சி எடுக்க மறக்காதீங்க...

கொரோனா வைரசால் பொது மக்கள் மட்டுமின்றி நம் தேசத்திற்காக எல்லா விளையாட்டுக்களிலும் பங்கேற்கும் ஒவ்வொரு விளையாட்டு வீரர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இந்த 21 நாள் ஊரடங்கினால், ஒவ்வொருவரும் தனது அணிக்காகவோ, தான் விளையாடும் கிளப்பிற்காகவோ, தனி நபர் போட்டிகளிலோ பங்குபெற முடியாமல் முடங்கியுள்ளனர்.

சராசரி மனிதராகிய நாமே உடற்பயிற்சி செய்ய முடியவில்லை என்றால் உடலளவிலும், மனதளவிலும் சோர்வடைகிறோம். நம் நாட்டிற்காக விளையாட்டில் ஈடுபடும் ஒவ்வொரு விளையாட்டு வீரர்களும், தற்போது தங்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். ஒவ்வொரு வீரருக்கும், தங்களது விளையாட்டிற்கேற்ப உடற்தகுதி மிகவும் அவசியம்.

ஒவ்வொருவரும் தங்களது விளையாட்டு அட்டவணைப்படி தங்களது உடல்தகுதியையும், விளையாட்டு திறனையும் மேன்படுத்திக் கொண்டே வருவார்கள். ஆனால் தற்போது கொரோனா வைரசினால் அவர்களால் வெளியே சென்றோ அல்லது விளையாட்டு மைதானத்திற்கு சென்றோ உடற்பயிற்சி செய்ய முடிவதில்லை.

ஒவ்வொரு வீரருக்கும் தனிப்பட்ட முறையில் ஒரு உடற்பயிற்சி ஆலோசகரோ அல்லது பிசியோதெரபி மருத்துவரோ ஆலோசித்து உடற்பயிற்சி செய்விப்பார்கள். பயிற்சியாளர் ஒவ்வொரு வீரரின் உடற்தகுதிக்குத் தகுந்தவாறு வீட்டிலோ அல்லது தனிநபர் INDOOR GYM-ல் செய்வதற்கான உடற்பயிற்சிகளை செய்யுமாறு வலியுறுத்துவார்கள்.

· உதாரணமாக கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு CORE EXERCISE மற்றும் LOWER BODY STRENGTHENING EXERCISE மிகவும் அவசியம்.

· அதே போல், பேட்டிங்க் செய்பவர்களுக்கு SHOULDER & WRIST STRENGTHRNING EXERCISE தேவை.

· டென்னிஸ் விளையாட்டுவீரர்களுக்கு வேகத்தை அதிகரிப்பதற்காக, டென்னிஸ் பந்து அல்லது கோன்களை 8 வடிவில் வைத்து ஓடுதல், தாண்டுதல் போன்ற பயிற்சி மிகவும் உதவியாக அமையும்.

· ஒரு சில விளையாட்டு வீரர்கள், நவீன உடற்பயிற்சி சாதனங்களிலேயே உடற்பயிற்சி செய்ய விரும்புவார்கள்.

இத்தகைய காலக்கட்டத்தில் உடற்பயிற்சியோடு சேர்த்து உணவுக்கட்டுப்பாட்டையும் பின்பற்றுவது மிகவும் அவசியம். பொதுவாக விளையாட்டுவீரர்களுக்கு தங்களது குடும்பத்தோடு நேரம் செலவிட வாய்ப்புகள் சரிவர அமையாது.

ஆகவே இந்நேரத்தில் தங்களது நேரத்தை மட்டும் செலவிடாமல் உடல்தகுதியையும், உடற்பயிற்சியையும் மேம்படுத்தி வரும் காலங்களில் போட்டி அட்டவணைப்படி தயார்படுத்திக் கொள்வது அவசியம்.

சராசரி மனிதன் இயல்பான வாழ்க்கைக்கு திரும்புவதும், ஒரு விளையாட்டுவீரர் அவரது வேலைக்கு திரும்புவதும் வேறான செயல். வீட்டிலிருந்தபடியே இருந்தாலும் FITNESS உடன் இருப்பது முக்கியம்.

 - A.T.C.MURUGESAN