பாக்கியராஜை மிரட்டுகிறதா தி.மு.க.? பொம்பளைன்னா சும்மா இல்லீங்க!

ஜாலியாகப் பேசுகிறேன் என்ற நினைப்பில், ஏடாகூடமாக எதையாவது பேசி வம்பு, வழக்கில் சிக்கிக்கொள்வது பாக்கியராஜ் வழக்கம். அந்த வகையில்தான் பெண்களை ஊசி என்றும் ஆன்களை நூல் என்றும் வர்ணித்துப் பேசிய விவகாரம் வில்லங்கமாகியுள்ளது.


பொள்ளாச்சியில் நடப்பது போன்ற பாலியல் குற்றங்களுக்கு பசங்க மட்டுமே காரணமில்லை, அதற்கு பெண்கள் இடம் கொடுப்பதும் காரணம் என்று, ‘கருத்துகளை பதிவு செய்’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், இயக்குனரும் நடிகருமான பாக்கியராஜ் பேசினார்.

பெண்களை மட்டரகமாகப் பேசிவிட்டு, "யாரும் தவறாக நினைக்கக் கூடாது, நான் இதுவரை எடுத்த திரைப்படங்களில் பெண்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் அளித்து, பெண்களுக்கு ஆதரவும் அளித்து வருகிறேன். ஏனென்றால் நான் கூட்டுக் குடும்பத்தில் இருந்து வந்துளேன். 

அதனால் பெண்களின் மனநிலையை நன்கு அறிவேன். கட்டுப்பாட்டுடன் பெண்கள் இருந்தவரை எல்லாம் நன்றாக இருந்தது. தற்போது இந்த செல்போன் வந்த பிறகு கட்டுப்பாடுகள் முற்றிலும் இல்லாமல் போய்விட்டது" என்று பேசினார் பாக்கியராஜ்.

ஒரு முறை பேசிய பெண்ணிடம் மற்றொரு முறை மாட்டிவிடக்கூடாது எனவும், நான் சிம் கார்டை மட்டும் தான் மாற்றுகிறேன். ஆனால் பெண்கள் இரண்டு அல்லது மூன்று ஃபோன்களை வைத்துக்கொண்டு மாற்றி மாற்றி பயன்படுத்துகிறார்கள் என்றும் கிண்டலாகப் பேசினார்.

இந்த விவகாரத்தை இப்போது தி.மு.க. கையில் எடுத்துள்ளது. தி.மு.க.வை சேர்ந்த பூச்சி முருகன் கடுமையாக கண்டித்துள்ளார். பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்களுக்கு பெண்களும் ஒரு காரணம் என்று பொத்தாம் பொதுவாக சொல்வதை எந்த ஒரு தந்தையும், கணவனும், சகோதரனும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

பிஞ்சு குழந்தைகள் பாலியல் வன்முறையால் சிதைக்கப்படும் செய்திகள் பாக்யராஜ் கவனத்துக்கு வரவில்லையா? அதிலும் அவர் சொன்ன ஊசி - நூல் உதாரணம் மிகவும் அபத்தமானது என்று கூறியிருக்கிறார். மேலும், கூடா நட்பு கேடாய் விளையும் என்னும் வரியை நிரூபிக்கும வகையில் பாக்யராஜ் சில நச்சு கிருமிகளுடன் சேர்ந்ததால் மாறி விட்டாரோ என்றும் கேட்டுள்ளார்.  

பாக்கியராஜ் வருத்தம் கேட்கவில்லை என்றால் தி.மு.க. போராட்டம் நடத்துமோ..?