இன்னும் எத்தனை காலம்தான் துரைமுருகனுக்கும் அவர் குடும்பத்துக்கும் ஓட்டு போடுவது..? வேதனையில் தி.மு.க. உடன்பிறப்புகள்

எழுதப்படாத சட்டம் என்பார்களே, அப்படி தி.மு.க.வில் உள்ள விஷயங்களில் ஒன்றுதான் காட்பாடி தொகுதி என்றால் அங்கு துரைமுருகன் போட்டியிடுவார் என்பது. எத்தனை பிரச்னைகள் தி.மு.க.வில் சுழன்றடித்தாலும் இந்த விஷயம் மட்டும் மாறவே மாறாது.


இப்போது துரைமுருகனுக்கு 83 வயது ஆகிவிட்டது . வாரிசு கதிர் ஆனந்த் பாராளுமன்ற உறுப்பினர் ஆகிவிட்டார் . ஆனாலும், துரைமுருகனுக்கு பதவி ஆசை போகவில்லை என்பதுதான் கொடுமையிலும் கொடுமை. இந்த தேர்தலிலும், இது எனக்கு கடைசி தேர்தல், எனக்கு, என் மகனுக்கு, எம் மருமகளுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று கேட்கும் கேவலமான மனநிலைக்கு துரைமுருகன் வந்துவிட்டார். 

இப்போது தி.மு.க.வில் பொது செயலாளராகியிருக்கும் துரைமுருகனுக்கு பிரசாரம் செய்வதற்கு முடிவதில்லை. ஏனென்றால், மைக் பிடித்தால் கை நடுங்குகிறது. ஆனாலும், பதவி ஆசை மட்டும் இன்னமும் இளமையாகவே இருக்கிறது.

இந்த தேர்தலில் துரைமுருகனுக்கு ஓட்டு போடுவதற்கு கட்சிகாரர்கள் யாரும் விரும்பவில்லை .விலகி போகிறார்கள் .ஆனாலும், துரைமுருகனை ஓரம் கட்டுவதற்கு ஸ்டாலினால் முடியவே இல்லை என்பதுதான் சோதனை. 

இப்படி ஒரு தலைவரை கொண்டுள்ள கட்சி எப்படி ஆட்சியைப் பிடிக்க முடியும் என்பதுதான் மக்களின் மனநிலை.