திமுக வேட்பாளர் செயல் வீரர்கள் கூட்டம்! போதையில் மல்லாந்து கிடந்த உடன்பிறப்பு!

பழனியில் நடைபெற்ற திமுக கூட்டணிக் கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டத்தில் திமுக தொண்டர் ஒருவர் மதுபோதையில் மயங்கிக்கிடந்தது கட்சியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது


பழனியில் நடைபெற்ற திமுக கூட்டணிக் கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டத்தில் திமுக தொண்டர் ஒருவர்  மதுபோதையில் மயங்கிக்கிடந்தது  கட்சியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது. திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளராக ஜவ்வாதுபட்டி வேலுச்சாமி போட்டியிடுகிறார்.

 இந்நிலையில் முன்னாள் அமைச்சர்  ஐ.பெரியசாமி தலைமையில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் பழனியில் நடைபெற்றது. தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்படட அந்த  கூட்டத்தில் கலந்துகொண்ட தொண்டர் ஒருவர் மதுபோதையில் மயங்கிக் கிடந்தது தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. செயல்வீரர்கள் கூட்டத்திலேயே இப்படி என்றால், தேர்தல் பணிகளை எப்படி பார்ப்பார்கள் என்றும்  சில தொண்டர்கள் வருத்தத்துடன் புலம்பிச் சென்றனர்