விருப்ப மனு வாங்குவதிலும் பணத்தை சுருட்டுறாங்கப்பா... தி.மு.க. மீது பாயும் உடன்பிறப்புகள்

வழக்கம்போல் இந்த தேர்தலிலும் விருப்பமனு அறிவிப்பை அ.தி.மு.க.தான் முந்திக்கொண்டு வெளியிட்டது. இதைக் கண்டு தி.மு.க. பதறிப் போனது. உடனடியாக தி.மு.க.வின் விருப்ப மனு வெளியிட்டது.


 கடந்த பத்து வருடங்களாக ஆளும் கட்சியாக இருக்கும் அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் தமிழ்நாட்டில் 15 ஆயிரம் ரூபாய், புதுச்சேரியில் ஐந்தாயிரம் ரூபாய், கேரளாவில் 2000 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

அதேநேரம் கடந்த பத்து வருடங்களாக எதிர்க்கட்சியாக இருக்கும் திமுக சார்பில் விருப்ப மனு கட்டணமாக 25 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் மகளிர் மற்றும் தனித்தொகுதி 15 ஆயிரம் ரூபாய் என்று குறைக்கப்பட்டுள்ளது. 

விருப்ப மனு கட்டணம் திமுகவில் மட்டும் அதிகமாக இருப்பது அதன் நிர்வாகிகளையே கொந்தளிக்க வைத்திருக்கிறது. ஆளும் கட்சியே 15 ஆயிரம் வாங்கும்போது, எதிர்க் கட்சியாக இருந்துகொண்டு 25 ஆயிரம் வாங்குவதை என்னவென்று சொல்வது?

மேலும், தேர்வாகாவில்லை என்றால் பணத்தை திரும்ப வாங்கிக்கொள்ளலாம் என்று சொல்வார்கள், ஆனால், அதை கொடுக்க மாட்டார்கள். வெளியே கொள்ளை அடிப்பது போதாது என்று சொந்தக் கட்சிக்காரர்களிடமும் கொள்ளை அடிக்கிறதே தி.மு.க. என்று கொந்தளிக்கிறார்கள்.

தி.மு.க.வில் இது சகஜம்தானேப்பா....