உள்ளாட்சி தேர்தலை விரட்டியடிக்கும் தி.மு.க., வெறுப்பேற்றும் தேர்தல் ஆணையம். அபசெட் நீதிபதிகள்!

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்காக அத்தனை மக்களும் காத்திருந்த நேரத்தில், வெறுமனே கிராமப்புற உள்ளாட்சிக்கு மட்டும் தேர்தல் என்று அறிவித்தது, தமிழக தேர்தல் ஆணையம்.


இது என்ன புதுக்கூத்து என்று யோசித்தால் இன்னமும் குழப்பம் மேல் குழப்பம். ஆம், புதிதாக வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருநெல்வேலி ஆகிய 4 மாவட்டங்கள் 9 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த புதிய மாவட்ட தொகுதி வரையறை உள்ளிட்ட சட்ட விதிகளை பின்பற்றாமல் தேர்தல்அறிவிக்கப்பட்டுள்ளது -என்று தி.மு.க. மேலும் ஒரு வழக்கு போட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், ‘ஏற்கனவே உள்ள மாவட்டத்தின் வார்டுகள் புதிய மாவட்டங்களுக்கு எப்படிப் பொருந்தும்?’ என்று- தலைமை நீதிபதி கேள்வி கேட்டார். அதற்கு, ‘தொகுதி மறுவரையறை பணிகள் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி செய்துள்ளோம். அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் படியே புதிய மாவட்டங்களுக்கு வார்டு மறு வரையறை செய்ய முடியும்’ என்று தேர்தல் ஆணையம் பதில் கூறியுள்ளது.

தொகுதி மறு வரையறை, இட ஒதுக்கீடு என எல்லா பணிகளும் நிறைவடைந்து விட்டது - மாநிலத் தேர்தல் ஆணையம். ஆனால், உண்மையில் எந்த பணியும் நடக்கவே இல்லை என்று நீதிமன்றத்தில் தி.மு.க. எடுத்துக்கூறியது.

இதையடுத்து, ‘நாடாளுமன்றம் என்ன விதி வகுத்துள்ளதோ அதன்படியே உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வேண்டும் என்றும், குறுக்கு வழியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது’ என்றும்- உச்ச நீதிமன்றம் தமிழக தேர்தல் ஆணையத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்தபின், எந்த நீதிமன்றத்தாலும் தள்ளி போட முடியாது -என்று சொல்லப்பட்டதும், தேவைப்பட்டால் தேர்தலை எங்களால் தள்ளி போட முடியும் -என்று சொன்ன நீதிபதிகள், பிரிக்கப்பட்ட பதிவுகளுடன் நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டுள்ளது.

என்ன நடக்கிறது என்றே பார்க்கலாம்.