கரோனா அச்சம் - தி.மு.க. பொதுக்குழுக் கூட்டமும் தள்ளிவைப்பு !

கரோனா வைரசு தாக்கும் எனும் அச்சம் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இம்மாத இறுதியில் நடைபெறுவதாக இருந்த தி.மு.க.வின் பொதுக்குழுக் கூட்டமும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.


அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றில் இதைத் தெரிவித்துள்ளார். பொதுக்குழுக் கூட்டம் எப்போது நடக்குமென பின்னர் அறிவிக்கப்படும் என்றும் வரும் 31ஆம் தேதிவரை கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்துசெய்யப்படுகின்றன என்றும் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கோவிட் வைரசு காய்ச்சல் பரவாமல் தடுக்கும்வகையில் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, நேற்று முன்தினம் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், துரைமுருகனின் பதவிவிலகல் குறித்தும் அதையொட்டி இம்மாதம் 29ஆம் தேதியன்று பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்கான தேர்தல் நடக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.