தி.மு.க. என்றால் திராவிட முன்னேற்றக் கம்பெனி இல்லையாம்! துரை முருகன் கதிர்ஆனந்த் என்பதுதானாம்! விஞ்ஞானி உதயநிதி கண்டுபிடிப்பு!

சமீபத்தில் ஜூனியர் விகடன் பத்திரிகை தி.மு.க. என்றால் திராவிட முன்னேற்றக் கம்பெனி என்று எழுதப்பட்டிருந்தது.


சமீபத்தில் ஜூனியர் விகடன் பத்திரிகை தி.மு.க. என்றால் திராவிட முன்னேற்றக் கம்பெனி என்று எழுதி, அதில் உதயநிதி, சபரீசன் மற்றும் துர்கா ஸ்டாலின் மட்டுமே இருப்பதாக ஒரு கட்டுரை எழுதியது. இதற்கு சம்பிரதாயத்துகாக ஒரு வக்கீல் நோட்டீஸ் மட்டும் அனுப்பினார் துர்கா.

இந்த நிலையில், இன்று வேலூர் தொகுதியில் பிரசாரம் செய்வதற்கு வந்தார் உதயநிதி. ஸ்டாலின் மற்றும் உதயநிதி தவிர கட்சியில் வேறு யாருக்கும் பேசத் தெரியாது என்பதால், இந்த இடைத்தேர்தலுக்கும் அவர்கள் இருவரை மட்டுமே நம்பவேண்டிய இக்கட்டான சூழல். அதனால் தன்னுடைய சொந்த வேலை மற்றும் சினிமா வேலை போன்ற எல்லாவற்றையும் மூட்டை கட்டிவிட்டு வேலூருக்கு பிரசாரம் செய்ய வந்தார் உதயநிதி.

அப்போதுதான் தி.மு.க. என்பதற்கு புதிய விளக்கம் சொன்னார். துரை முருகன் கதிர் ஆனந்த் என்பதன் சுருக்கம்தான் தி.மு.க. என்று ஜூனியர் விகடனுக்கு விளக்கம் சொன்னார். மேலும், இங்கே இருந்துதான் பிரசாரத்தை உதயநிதி தொடங்கினாராம், அதனால் வெற்றி உறுதி என்றும் சொல்லிக்கொண்டார்.

என்ன தம்பி, அத்திவரதரைப் பார்க்கப்போலீயா..?