விக்கிரவாண்டி தேர்தலுக்கு மல்லுக்கட்டும் தி.மு.க! 70 பூத்களில் சி.சி.டி.வி. பொருத்த கோரிக்கை!

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் எப்படியும் வெற்றிபெற்றே தீரவேண்டும் என்பதில் தி.மு.க. மிகவும் உறுதியாக இருக்கிறது.


அதனால்தான் பொன்முடியைவிட ஜெகத்ரட்சகன் சரியான சாய்ஸ் என்று அவரை களம் இறக்கியுள்ளது. இந்த நிலையில் பா.ம.க.வினர் சில பூத்களில் ஆதிக்கம் செலுத்தி கள்ள ஓட்டு போட இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாம். அதனால், இன்று தேர்தல் கமிஷனுக்கு தன்னுடைய வழக்கறிஞர் குழு மூலம் ஒரு கடிதம் கொடுத்துள்ளது.

அந்தக் கடிதப்படி, விக்கிரவாண்டியில் நாங்கள் கொடுத்துள்ள 70 பூத்களில் கலவர அபாயமும் கள்ள ஓட்டு அபாயமும் நிகழ்வதற்கு வாய்ப்பு உண்டு. அதனால், இந்த பூத்களில் சி.சி.டி.வி. பொருத்தி முழுமையான கண்காணிப்பு நடத்த வேண்டும் என்று ஆர்.எஸ்.பாரதி எம்.பி. கோரிக்கை கொடுத்துள்ளார்.

இந்த பூத்களில் கூடுதல் காவலர்களை களம் இறக்கி பாரா நடத்தினால்தான் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க முடியும். இந்த பூத்களில் வாக்கு இயந்திரத்தை கைப்பற்றவும் ஆளும் கட்சி அராஜகத்தில் ஈடுபடவும் வாய்ப்பு உள்ளதால், நேர்மையான தேர்தலுக்கு உத்தரவாதம் வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.

இப்போது காடுவெட்டி குருவின் இறுதிப் பயணச் செலவுக்கு நான்தான் பணம் கொடுத்தேன், ராமதாஸ் எங்கே போயிருந்தார் என்று இன்று ஜெகத் ரட்சகன் எழுப்பியிருக்கும் கேள்வியும் ஏரியாவில் படு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாம்.