சமுத்திரக்கனி ஒரு நாள் பிரச்சாரத்திற்கு எவ்வளவு தெரியுமா? வடிவேலுக்குப் பதிலாக பிடித்துப்போட்ட உதயநிதி!

இந்தத் தேர்தலில் தி.மு.க.வுக்கு ஸ்டாலின் மற்றும் உதயநிதி இரண்டு பேர் மட்டும்தான் ஸ்டார் வேட்பாளர்களாக தமிழகம் முழுவதும் சுற்றிச்சுழன்று வருகிறார்கள்.


கடந்த தேர்தலில் தலைகாட்டிய சினிமா நட்சத்திரங்கள் எல்லாம் ஓடி ஒளிந்துகொண்டனர். திடீரென அ.தி.மு.க.வுக்கு விந்தியா தேர்தல் களத்தில் இறங்கிவிட்டார். அவர் தாறுமாறாக தி.மு.க.வை கிழித்து தொங்கவிட்டு வருகிறார். இந்த நிலையில் தி.மு.க.வும் சினிமா கலைஞர்களை களம் இறக்க ஆசைபட்டது.

தேர்தல் பிரசாரத்துக்கு வரவேண்டும் என்று வடிவேலுக்கு போன் செய்வதற்குள் ஊரில் போய் ஒளிந்துகொண்டார் இம்சை அரசன். அதனால் வேறு யாரை பிடிக்கலாம் என்று யோசித்தபோதுதான் சமுத்திரக்கனி பற்றி பேச்சு வந்திருக்கிறது.

நல்ல நடிகராகவும், நல்ல சிந்தனையாளராகவும் அவருக்குப் பெயர் இருக்கிறது என்பதால், அவரை எப்படியாவது களத்தில் இறக்குவதற்கு ஆசைப்பட்டார்கள். உதயநிதி மூலம் நெருங்கிப் பேசினார்கள். ஆனால், அவர் எதிர்பார்த்தது மிகவும் அதிகம் என்பதால் அப்செட்.

வேறு வழியில்லாமல் ஒரே ஒரு கால்ஷீட் மட்டும் வாங்கியிருக்கிறார்கள். அதற்கு கேட்ட தொகை 25 லட்சமாம். ஆனால் தி.மு.க. தரப்பு 10 லட்சத்தில் நின்றிருக்கிறது. 10 லட்சம் மட்டும் கொடுத்தால் நான் மதுரைக்குப் போய் சு.வெங்கடேசனுக்கு மட்டும்தான் பிரசாரம் செய்வேன்.

மற்ற இடங்களுக்குப் போகவேண்டும் என்றால் 20 லட்சம் வேண்டும் என்று கேட்டாராம். அதனால் அலறிப்போன தி.மு.க.வினர் மதுரை மட்டும் முதலில் பிரசாரம் செய்யுங்கள். உங்களுக்குக் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து கால்ஷீட் வாங்கிக்கொள்கிறோம் என்று அனுப்பியிருக்கிறார்கள்.

சமுத்திரக்கனி வந்தால் கூட்டம் கூட்டமாக பெண்கள் திரண்டு வரும் என எதிர்பார்க்க... அங்கேயே காற்றாடுகிறது. பத்து லட்சத்தோடு முடிஞ்சுபோச்சு என்று நிம்மதி பெருமூச்சு விடுகிறது தி.மு.க. இளைஞர் படை.