நாலுமே தோக்குற தொகுதி! கொந்தளிக்கும் பிரேமலதா! அதிமுக கூட்டணியில் திடீர் குழப்பம்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வம்படியாக விஜயகாந்த் வீட்டுக்கு சமாதானம் பேசுவதற்குப் போனார். ஆனால், அவர் போய் சமாதானம் செய்தும் பிரேமலதா ஒப்புக்கொள்வதாக இல்லை.


பா.ம.க.வசம் இருக்கும் தொகுதிகளில் நான்கு எங்களுக்கு வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறார்.

தற்போது தே.மு.தி.க.வுக்கு கள்ளக்குறிச்சி, திருச்சி, சென்னை வடக்கு மற்றும் விருதுநகர் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு தொகுதிகளிலும் தே.மு.தி.க.வுக்கு ஓட்டு வங்கி கிடையாது. கள்ளக்குறிச்சியில் பொன்முடியின் மகன் நிற்பதால், அந்தக் கட்சி முழுமையாக இறங்கி வேலை பார்க்கும்.

திருச்சியில் அ.ம.மு.க. சார்பில் நிற்கும் சாருபாலா தொண்டைமான் எல்லா எதிர்ப்புகளையும் மீறி சர்வசாதாரணமாக ஜெயிப்பார் என்று சொல்லப்படுகிறது. வட சென்னை பற்றி சொல்லவே வேண்டியதில்லை. மாறன் ஜெயித்துவிடுவார். விருதுநகர் தொகுதியில் மாணிக் தாகூர் சொல்லி அடிப்பதில் கில்லி.

ஆக, நான்கு தொகுதிகளும் தோற்கும் தொகுதிகள் என்றால் வேண்டவே வேண்டாம் என்று விஜயகாந்த்தும் பிரேமலதாவும் பிடிவாதம் பிடிக்கிறார்கள். ஆனால், தன்னுடைய தொகுதிகளை மாற்றுவதற்கு வாய்ப்பே இல்லை என்று ராமதாஸ் உறுதியாக நிற்கிறார். இரண்டு முறை சமாதானம் பேசியும் மடியவில்லை. அதனாலே இன்று தொகுதிப் பங்கீடு அறிவிப்பில் ராமதாஸ், விஜயகாந்த் கலந்துகொள்ளவில்லை.

இவங்க ரெண்டு பேரும் முட்டிக்கிறதைப் பார்த்தா… அ.தி.மு.க. கூட்டணி சூப்பருண்ணே…