வெளியானது அதிர்ச்சி தகவல்! 331 பள்ளிகளுக்கு அங்கீகாரம் இல்லை! பெற்றோர்களே உஷார்!

சென்னையில் நீண்ட ஆய்விற்க்கு பின்னர் முறையான அங்கீகாரம் பெறாத 300 க்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் அறிவிப்பு.


சென்னையில், குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் அடிப்படையில் முறையான அங்கீகாரம் மற்றும் தடையின்மை சான்றிதழ் பெறாத பள்ளிகள் இயங்கி வருவது குறித்து ஆய்வினை மேற்க்கொண்டு மேலும் அதற்க்கு விளக்கம் கேட்டு அதிகாரப்பூர்வமாக பள்ளி கல்வித்துறை சார்பாக நோட்டீஸ் அளிக்கட்டது.

இந்த நிலையில் முறையான  அங்கீகாரம் பெறாத பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எதிர்காலத்தில் அரசு சார்பில் நடத்தப்படும் பொதுத்தேர்வுகளில் கலந்துக்கொள்ள முடியாத சூழல் ஏற்படுவதால் மாணவர்கள் பாதுகாப்பு கருதி, பள்ளிக் கல்வித்துறை சார்பில் சுமார் 331 பள்ளிகள் தடையின்மை சான்றிதழ் மற்றும் அங்கீகாரம் பெறாமல் இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு செல்ல வேண்டம் எனவும் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தியது. இதற்க்கிடையில், அறிவிக்கப்பட்ட 331 பள்ளிகள் தடையை மீறி மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.