டயட் கோலா டயட் சோடா போன்றதை குடிப்பவர்களா நீங்கள்? இது உங்களுக்கான எச்சரிக்கை..!

பார்ட்டிகளிலும், மீட்டிங்குகளிலும் பீர், விஸ்கி போன்ற உற்சாக பானத்திற்கு பதிலாக டயட் சோடா, டயட் பெப்சி போன்றவை எடுத்துக் கொள்வது சர்வசாதரணமாகி விட்டது. இதனால் உடல் எடை அதிகரித்தலும், சர்க்கரை போன்ற விளைவுகளும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.


டயட் சோடா என்பது கார்பனேற்றமடைந்த, செயற்கையான இனிப்புபொருட்கள், சுவையூட்டிகள் நிறைந்த தண்ணீர் போன்ற கலவை தான். இவை மிகக்குறைந்த அளவில் கலோரிகள் அல்லது கலோரிகள் எதுவும் இல்லாமல் இருக்கும்.

· எல்லா டயட் சோடாக்களிலும் ஆஸ்பார்ட்டமே (ASPARTAME), சாக்கரின், சுக்ரலேஸ் போன்ற செயற்கை இனிப்பு சுவையூட்டிகள், இது நாம் உபயோகப்படுத்தும் சாதாரண சர்க்கரையைவிட 200- 13,000 மடங்கு இனிப்பு சுவை அதிகம்.

· நிறத்திற்காக, கரோட்டினாய்டு, ஆந்தோசயனின், கேராமில் போன்றவை சேர்க்கிறார்கள். கெடாமல் பாதுகாக்க, பொட்டாசியம் பென்சோயேட் என்ற வேதிப்பொருள் சேர்க்கிறார்கள்.

· டயட் சோடா எடுத்துக்கொள்ளும் போது, பசியைத்தூண்டி, இனிப்புசுவைக்கான ரிசப்டார்களை மூளையில் தூண்டுகிறது. இவ்வாறு தூண்டும் போது கலோரி அதிகம் உள்ள உணவுகளை உட்கொண்டு உடல்பருமன் அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.

டயட் சோடாவால் ஏற்படும் விளைவுகள்

· உடலில் எலும்பு அடர்த்தி குறைகிறது.

· டயட் சோடாவை ஆல்கஹாலுடன் சேர்த்து எடுத்துக்கொள்ளும் போது அது காக்டெயிலை விட அதிக போதை தருவதாக அமைகிறது.

· மூளையில் சுவையை பிரித்தறியும் திறன் இல்லாமல் போய்விடும்.

· இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கிறது.

· டயட் சோடாவை அதிகஅளவில் எடுத்துக்கொள்ளும் போது சிறுநீரகத்தைப் பாதிக்கிறது.

· டயட் சோடா எடுத்துக்கொள்ளும் போது மூளையில் உள்ள நியூரோ டிரான்ஸ்மிட்டர்களை பாதித்து, திரும்ப திரும்ப எடுத்துக் கொள்ளத் தூண்டி போதைக்கு அடிமையானது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

· இதன் பேரே டயட் என்று இருப்பதால் இது உடல் எடையை குறைப்பதற்கான பானம் என்று அர்த்தமில்லை.

· சாதரணமாக பீர் எடுத்துக் கொள்பவர்களைக் காட்டிலும், டயட் சோடா எடுத்துக்கொள்பவர்கள் மூன்று மடங்கு எடை அதிகரிக்கிறார்கள்.

· டயட் சோடா உடலில் புத்துணர்ச்சியை ஊட்டினாலும் மாரடைப்பு ஏற்படுவதற்கு காரணமாகிறது.

-ராமலெட்சுமி