நடிகர் அஜித், அரசியலுக்கு வரவேண்டும் என்று, இயக்குனர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.
தலைவா நீ அரசியலுக்கு வா! அழைப்பு விடுத்த பிரபல இயக்குனருக்கு அஜித் கொடுத்த நச் பதில்!
தமிழ் சினிமா இயக்குனர்களில், அஜித் முன்னணி நடிகராக வலம் வருகிறார். சமீபத்தில் இவர் நடித்து வெளியான விஸ்வாசம் படம், போட்டிக்கு ரிலீஸ் செய்யப்பட்ட ரஜினியின் பேட்ட படத்தின் வசூல் சாதனையையே முறியடித்து சாதனை படைத்துள்ளது. இந்த படத்தின் வசூல் தமிழ் சினிமா துறையில் புதிய சாதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அஜித் பற்றி, இயக்குனர் சுசீந்திரன் சமூக வலைதளமான ட்விட்டரில் ஒரு வேண்டுகோளை வெளியிட்டுள்ளார். அதில், ''40 ஆண்டுகால திராவிட அரசியலில் மாற்றத்தை உருவாக்க, உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும். தமிழக மக்களின் நலன்கருதி, மக்கள் பணிக்கு வரும்படி உங்களை அழைக்கிறேன். இதுதான் உங்களுக்கு 100% சரியான தருணம், வா தலைவா, வந்து மாற்றத்தை உருவாக்கு...'' என்று சுசீந்திரன் நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார்.
ஆனால், இதற்கு அஜித் ரசிகர்களிடம் இருந்து எதிர்மறையான விமர்சனம் எழுந்துள்ளது. ''நடிகர் அஜித் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும், அவர் அரசியலுக்கு வரவேண்டிய தேவையில்லை, ரசிகர்களாகிய நாங்கள் யாரும் அதை எதிர்பார்க்கவும் இல்லை,'' என்று தல ரசிகர்கள் நெத்தியடியாக பதில் தெரிவித்து வருகின்றனர். ரஜினி படத்தின் வசூல் சாதனையை முறியடித்துவிட்ட காரணத்தால், அஜித் அரசியலுக்கு வரவேண்டும் என்று கட்டாயம் இல்லை எனவும் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும், இதற்கு அஜித் பதில் தருவாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதே சமயம் சுசீந்திரன் அழைப்பு விடுத்து இரண்டு நாட்கள் கடந்துள்ளது. தற்போது வரை அஜித் இந்த விவகாரத்தை கண்டுகொள்ளவில்லை. இதன் ’மூலம் உனக்கு எல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது என்கிற ரீதியில் அஜித் அமைதியான பதிலடி கொடுத்திருப்பதாக கூறுகிறார்கள்.