இறக்கும் தருவாயில் ஒரு மணிநேரமாவது நடிகை ஸ்ரீதேவியின் கல்லறையில் வாழவேண்டும் என இயக்குர் ராம்கோபால் வர்மா சர்ச்சை கருத்து தெரிவித்து விளம்பரம் தேடியுள்ளார்.
செத்த பிறகு நடிகை ஸ்ரீதேவியின் கல்லறையிலாவது வாழ வேண்டும்..! பிரபல இயக்குனருக்கு வந்த விநோத சபலம்..!

பிரபலங்கள் குறித்து டிவிட்டரில் பதிவிடுவதும், அதன் மூலம் சர்ச்சையில் சிக்குவதிலும் பெயர் போனவர் ராம்கோபால் வர்மா. அவர் இயக்கிய படங்கள் இந்தியில் ரங்கீலா, தெலுங்கில் லட்சுமி என்.டி.ஆர் மிகப்பெரும் பிரச்சனைகளை எழுப்பினர். சமீபத்தில் ஆந்திராவின் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை குறித்து "கம்மா ராஜ்யம்லோ கடப்பா ரெட்டி" என்ற பெயரில் ராம்கோபால் வர்மா எடுத்த படம், ஆந்திர அரசியலில் புயலைக் கிளப்பியது.
இந்நிலையில் ரசிகர்களின் கேள்விகளுக்கு மனம் திறந்து பதில் அளித்துள்ள ராம்கோபால் வர்மா, தனக்கு உயிர் வாழ ஒரு மணி நேரம் மட்டுமே கிடைக்கிறது என்றால், நடிகை ஸ்ரீதேவியின் கல்லறையில் தான் வாழ ஆசைப்படுவேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் தனது உடலை ஸ்ரீதேவியின் கல்லறைக்கு அருகே அடக்கம் செய்ய வேண்டும் என்பதே என்னுடைய கடைசி ஆசை என்றும் குறிப்பிட்டுள்ளார் ராம்கோபால் வர்மா.
மேலும் மற்றவர்களை போல ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுப்பது கடினம் என தெரிவித்துள்ளார். பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா இப்படி ஒரு ஆசை தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
இயக்குநர் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் நடிகை ஸ்ரீதேவி 1991ம் ஆண்டு ஷனா ஷனம் (தெலுங்கு), 1993ம் ஆண்டு ஹரிஹரன் (இந்தி), 1994ம் ஆண்டு கோவிந்தா கோவிந்தா (தெலுங்கு), 1996ம் ஆண்டு கிரேட் ராபரி (இந்தி) உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.