மற்றவர்களை காயப்படுத்துவதில் சேரன் வல்லவர்! எனக்கு நிறைய அனுபவம் இருக்கு! உண்மையை உடைத்த பார்த்திபன்!

பிறரை காயப்படுத்துவது குறித்து சேரன் கவலைப்பட மாட்டார் என்று இயக்குனர் பார்த்திபன் கூறியிருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பிக்பாஸ் 3-வது சீசன் வெகுவிமர்சையாக சென்று கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 80 நாட்கள் முடிந்த நிலையில் தற்போது நிகழ்ச்சியானது விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளது. இயக்குனர் சேரன், முகென், லாஸ்லியா, கவின், சாண்டி, தர்ஷன், ஷெரின் ஆகியோர் பட்டத்தை வெல்வதற்காக கடுமையான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குனர் பார்த்திபன் சேரன் குறித்து கூறிய சில கருத்துக்கள் திரையுலகில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

"கேரன் மிகவும் உண்மையான இயக்குனர். அதனால் பிறர் காயப்படுவது குறித்து எள்ளளவும் கவலைப்பட மாட்டார். அவருடைய "பாரதி கண்ணம்மா" படத்தில் நானும் வடிவேலுவும் நடித்திருந்தோம். சாதி ஒழிப்பு பற்றி சமூகத்தில் பேசப்பட்ட படங்களில் அதுவும் ஒன்று. அந்த படத்தை இயக்கும் போது அவர் மிகவும் சீரியஸாக இருந்தார்.

நானும் வடிவேலுவும் கொஞ்சம் காமெடியை பயன்படுத்தினோம். ஆனால் அதற்கு அவர் ஒப்புக்கொள்ளவே இல்லை. காமெடி சொதப்பினால் படத்தின் கரு அழிந்துவிடும் என்று அவர் கூறினார். அதன்பின் நாங்கள் அனைவரும் சேர்ந்து அவரை சம்மதிக்க வைத்தோம். அடுத்த படமான "வெற்றிக்கொடிகட்டு" படத்தில் சில காமெடி கான்செப்ட்களை உருவாக்கி என்னையும் வடிவேலுவையும் நடிக்க வைத்திருந்தார்.

அவர் மிகவும் நல்ல மனிதரும் கூட. அவரிடம் எனக்குப் பிடிக்காத சில விஷயங்களலுள்ளன. ஒருமுறை மேடையில் ஏதோ ஒரு படத்தை பார்த்துவிட்டு வந்து கருத்தை சொல்லும் போது "என்னய்யா பார்த்திபன் படம் பண்ற மாதிரி பண்ணிருக்கீங்க" என்று விமர்சித்தார். பிறர் காயப்படுவது பற்றி கவலைப்படாமலிருப்பது அவருடைய ஸ்பெஷல் குணம்" என்று பார்த்திபன் கூறியிருந்தார்.

மேலும் "ஒத்த செருப்பு" படத்தில் நீண்ட நேரம் செலவிடுவதால் பிக்பாஸ் சீசனை என்னால் தொடர்ந்து காண இயலவில்லை. அதனால் சேரனின் பிற நடவடிக்கைகளைப்பற்றி கருத்து கூற இயலாது என்றும் கூறினார்.

இந்த பேட்டியானது கோலிவுட் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.