இயக்குனர் மு.களஞ்சியத்துக்கு இலங்கையில் அடி, உதை! சீமான் என்ன சொன்னாருன்னு தெரியுமா?

தமிழ் தேசியம் பேசுவதற்கென்றே சில இயக்குனர்கள் கிளம்பினார்கள். அவர்களில் சீமான், கௌதமன், களஞ்சியம் போன்றவர்கள் முக்கியமானவர்கள்.


 மாவீரர் தினத்தையொட்டி ஈழத்துக்குப் போன களஞ்சியத்துக்கு இலங்கையில் மறக்கமுடியாத வரவேற்பு கிடைத்ததாக பேசப்படுகிறது. ஆம், ஈழத் தமிழர்களிடம் சென்று பேசிய டைரக்டர் மு களஞ்சியம், தமிழகத்தில் பேசுவதுபோல் இலங்கை அரசினை கடுமையாக விமர்சனம் செய்து பேசினாராம். அதனை ஈழ தமிழர்களின் ஒரு பிரிவு, சிங்களத்தாருக்கு காட்டிக்கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து, களஞ்சியம் தமிழகத்தில் பேசிய வீடியோ மற்றும் இலங்கையில் பேசிய வீடியோ அனைத்தையும் உளவுத்துறைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். உடனே விமானத்தில் ஏறிய களஞ்சியத்தை இறக்கிவந்திருக்கிறார்கள். இரண்டு நாட்கள் களஞ்சியத்துக்கு உணவு கொடுக்காமல், அவர்கள் இடத்திலேயே வைத்து விசாரணை செய்யப்பட்டு, அடி, உதையும் கொடுக்கப்பட்டுள்ளதாம். 

தகவல் தெரிந்து இந்திய தூதரகத்திலிருந்து ஆந்திராவை சேர்ந்த ஓர் அதிகாரி சென்றிருக்கிறார். அவர் கையினைப் பிடித்துக்கொண்டு, "என்னை எப்படியாவது இந்தியா அனுப்பிவைச்சுரு தேவுடா தெரியாத்தனமா வந்துட்டேன்" என்று கெஞ்சினாராம் களஞ்சியம். அதனையடுத்து இந்தியாவுக்கு களஞ்சியம் அனுப்பப்பட்டுள்ளர்.

கழுத்தில் அடிபட்டு, காலில் அடிபட்டு நொண்டி நொண்டி இந்தியா வந்துசேர்ந்து, சில நாட்கள் சிகிச்சை பெற்றுள்ளார். இந்தத் தகவல் அறிந்து சீமான் சிரித்தாராம். மாவீரர் தினம் என்றால் முதலில் பாதுகாப்பாக இந்தியாவில் அல்லது ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் கொண்டாட வேண்டுமே தவிர, நிஜமாகவே இலங்கைக்குப் போகலாமா என்று கேட்டாராம் சீமான்.

அதான, சீமான் புத்திசாலியாச்சே.