நான் வீழ்வென் என்று நினைத்தாயோ? மீண்டும் பஞ்சாயத்தை ஆரம்பிக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்!

‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?’ என்ற புதிய நிகழ்ச்சியை இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் தனியர் இணையதளத்தில் தொகுத்து வழங்க உள்ளார்.


ஆரோஹனம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி, ஹவுஸ் ஓனர் ஆகிய படங்களின் இயக்குநரான லட்சுமி ராமகிருஷ்ணன் பல படங்களில் நடித்துள்ளார். பெண்ணிய சிந்தனையாளர் என்ற மற்றொரு முகமும் இவருக்கு உண்டு. 

‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான லட்சுமி ராமகிருஷ்ணன். இந் நிகழ்ச்சி மூலம் கேலி கிண்டல்களை சந்தித்த அவர், அவற்றை தவிடு பொடியாக்கி சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். குணச்சித்திர வேடமாக இருந்தாலும், அம்மா வேடமாக இருந்தாலும் தனது யதார்த்த நடிப்பால் அசத்துபவர்.

இந்நிலையில் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சிக்கு பிறகு முதல்முறையாக ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?’ என்ற புதிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன். சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு இருக்கும் ரசிகர் கூட்டம் போலவே இந்த நிகழ்ச்சிக்கும் பெரும்பாலான ரசிகர்கள் ஆதரவு இருக்கும் என கூறப்படுகிறது.