சீமான் கட்சியில் இருந்து திமுகவுக்கு தாவிய பிரபல இயக்குனர்! கனிமொழிக்கு ஆதரவாக பிரச்சாரம்!

நாம் தமிழர் கட்சியின் சீமானின் ஆதரவாளராக இருந்த இயக்குனர் தற்போது திமுகவில் இணைந்து உள்ளார்.


பார்த்திபன் கனவு திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் கரு பழனியப்பன். அந்த ஒரு படத்தைத் தவிர கரு பழனியப்பன் உருப்படியாக வேறு எந்த திரைப்படத்தையும் எடுக்கவில்லை. இதனால் திரையுலகில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஆனால் கரு பழனியப்பன் நன்றாக வாய் பேசக்கூடியவர். இதனை பயன்படுத்தி அவ்வப்போது ரஜினி உள்ளிட்டோரை விமர்சித்து வீடியோ வெளியிட்டு புகழ் வெளிச்சத்திற்கு வந்தவர் கரு பழனியப்பன். நன்றாக பேசுகிறார் என்பதால் தொலைக்காட்சிகளும் கரு பழனியப்பனை விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்க அழைத்தது.

இதனைத் தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியை போல் ஒரு நிகழ்ச்சியை காப்பி அடித்து கரு பழனியப்பன் நடத்தி வருகிறார். தனக்கென்று எந்த அரசியல் நிலைப்பாடும் இல்லாத கரு பழனியப்பன் அவ்வப்போது ஒரு நிலைப்பாடு எடுத்துக் கொள்பவர். அந்த வகையில் இது நாள் வரை நாம் தமிழர் கட்சியில் சீமானுக்கு ஆதரவாக இருந்து வந்தார்.

இந்த நிலையில் தூத்துக்குடி சென்ற கரு பழனியப்பன் அங்கு திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதர வாக பிரச்சாரம் மேற்கொண்டார். இதன் மூலம் இதுநாள் வரை அவர் இருந்த நாம் தமிழர் கட்சியில் இருந்து திமுகவிற்கு தாவி விட்டதாக பேச்சு அடிபடுகிறது.