முட்டித் தூக்கிய ஜல்லிக் கட்டு காளை. குடல் சரிந்து உயிருக்கு போராடிய தந்தை! களம் இறங்கிய மகன் செய்த செயல்! திண்டுக்கல் பரபரப்பு!

திண்டுக்கல்லில் வளர்த்த காளையே மார்பில் பாய்ந்த நிலையில் உயிரை பணயம் வைத்து தந்தையை மகன் காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.


திண்டுக்கல் மாவட்டம் ஐயர் மடம் பகுதியை சேர்ந்தவர் மணிவேல் நேற்று தனது காளை மாட்டை மேய்த்துக்கொண்டு இருந்துள்ளார். அப்போது காளை திடீரென மிரண்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மணிவேல் காளையை அடக்க முயன்றார். ஆனால் மணிவேலின் கட்டளைக்கு அடிபணியாத அந்த காளை அவரது வயிற்றிலும், மார்பிலும் தனது கொம்புகாளல் குத்திக் குதறியது.

இதனால் மணிவேலின் வயிற்றுப்பகுதி கிழிந்து குடல் சரிந்து படுகாயம் அடைந்துள்ளார். எனினும் காளை அவரை விடவில்லை. மீண்டும் தாக்க முயற்சி செய்தது. இதை பார்த்த மணிவேலின் மகன் பூபதி விரைந்து வந்து தந்தையை காப்பாற்ற முயன்றார். ஆனால் மீண்டும் காளை சீறிப்பாய்ந்தது.  

பின்னர் ஒருவழியாக அங்கு முட்டிக்கொண்டிருந்த காளையை கயிறு மூலம் காளையை பிடித்து தந்தையை காப்பாற்றியுள்ளார். இதனை அடுத்து மணிவேல் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டடு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காளையிடமிருந்து சாதூர்யமாக தந்தையை, மகன் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வளர்த்த கடா மார்பில் பாயும் என்று சொல்வார்களே அது இதுதானோ?