எடப்பாடி பயந்துட்டதா தினகரன் சொல்றார்! உண்மையா ஜெயக்குமார்?

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு மீடியாக்களின் அனாதரட்சகன் தினகரன்தான்.


தினமும் கேமராவுக்கு முன்புதான் கண் விழிப்பார், பல் தேய்ப்பார், குளிப்பார். ஆனால், தேர்தல் தோல்விக்குப் பிறகு அவரை யாரும் கண்டுகொள்வதில்லை. 

மேலும் அ.ம.மு.க.வினர் எங்கெல்லாம் ஆக்டிவாக இருக்கிறார்களோ, அவர்களை எல்லாம் இழுத்துவந்து அ.தி.மு.க.வில் சேர்க்கும் வேலையில் எடப்பாடி மிகவும் ஆர்வமாக இருக்கிறார். இந்த நேரத்தில் எடப்பாடியை விமர்சனம் செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதோ, அந்த அறிக்கை. தமிழக முதல்வர் வெளிநாட்டு பயணத்தின் போது பொறுப்புக்களை ஒப்படைக்காமல் சென்றது அவரது பயத்தினால்தான். ஏனென்றால் இ.பி.எஸ். அணியும் ஓ.பி.எஸ். அணியும் இன்னமும் உள்ளத்தால் இணையவே இல்லை என்று கூறியிருக்கிறார்.

மேலும், அ.ம.மு.க. கட்சியை பதிவு செய்து ஒரே சின்னத்தை பெற முயற்சி செய்து வருகிறோம், அப்படி ஒரே சின்னத்தை பெற்றவுடன் தேர்தலை சந்திப்போம். தமிழகத்தில் அரசாங்கத்தை மீறி காவல்துறை தனது பணியை செய்யவேண்டும் அவ்வாறு செயல்பட்டால் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

எடப்பாடி பயந்துட்டார் என்று தினகரன் சொன்னதற்கு இன்னமும் ஜெயக்குமார் பதில் சொல்லாமல் இருந்தால் எப்படி? உடனே ஏதாச்சும் சொல்லுங்க சாரே.