இன்று காலையில் தினகரனில் தமிழ்நாடு மாணவர் முன்னேற்ற அமைப்பு சார்பாக வெளியிட்டுள்ள ஒருபக்க விளம்பரத்தில், மாணவர்களின் மனிதக் கடவுள் எடப்பாடி பழனிசாமி. மாணவர்கள் ஓட்டு உங்களுக்குத்தான் என்று விளம்பரம் வெளியாகியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி மாணவர்களின் மனித கடவுள்.. தினகரன் விளம்பரத்தால் திமுகவில் பரபரப்பு!

பத்தாம் வகுப்பு, 11ம் வகுப்பு மாணவர்களை ஆல் பாஸ் ஆக்கிய காரணத்தாலும், அரியர் பரீட்சை எழுதாமலே பாஸ் என்று அறிவித்த காரணத்தாலும், மாணவர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமிக்கு செல்வாக்கு கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதையே விளம்பரமாக கொடுத்துள்ளனர்.
இந்த விளம்பரம் தி.மு.க. ஆதரவு பத்திரிகையான தினகரனில் வெளியான விவகாரம்தான் படு பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. இந்த விளம்பரத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஸ்டாலின் உடனடியாக கலாநிதி, உதயநிதி வகையறாக்களிடம் பேசி டென்ஷன் ஆனதாக சொல்லப்படுகிறது.
வியாபார ரீதியில் வரும் விளம்பரங்களைப் போடுவது எப்படி தவறாக இருக்க முடியும் என்று அவர்கள் பேசியதாகவும், குடும்பத்தில் பெரும் குழப்பம் ஓடிக்கொண்டு இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.
எப்படியோ, மாணவர்களின் தலைவர் எடப்பாடி என்பதை தி.மு.க. பத்திரிகையும் உறுதி செய்துவிட்டது.