ஜெயா டி.வி.யில் இருந்து விவேக்கை விரட்டியடித்த தினகரன்! எல்லாம் சசிகலா உபயம்தானாம்!

ஜெயலலிதாவின் செல்லப்பிள்ளை என்று சொல்லப்படுபவர் விவேக். இவர்தான் சசிகலாவின் முக்கியமான அத்தனை சொத்துக்களுக்கும் பாதுகாவலர்.


அதனால், ஜெயா டி.வி.யும் இவர் வசமே இருந்தது. ஆனால், திடீரென தினகரனுக்கு ஜெயா டி.வி.யில் முக்கியத்துவத்தைக் குறைத்தார் விவேக். மக்கள் செல்வன் என்று சொல்லப்பட்டு வந்ததை மாற்றி தினகரன் என்று மட்டும் சொன்னால் போதும் என்றார். அதே நேரம் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் சொன்னார்.

இதனால் தினகரன் டீம் ஒட்டுமொத்தமாக அப்செட். தினகரனைவிட, அவர் மனைவியும், தினகரனின் உதவியாளர்களும் டென்ஷன் ஆனார்கள். ஏனென்றால், ஜெயா டி.வி.யிலும் தினகரனை காட்டவில்லை என்றால், அப்படியொரு கட்சி இருப்பதே யாருக்கும் தெரியாமல் போய்விடும் என்பதுதான்.

அதனால் உடனடியாக பெங்களூர் சிறைக்குச் சென்று தினகரனும் அவர் மனைவி அனுராதாவும் ரத்தக்கண்ணீர் வடித்திருக்கிறார்கள். உங்களைவிட்டா எங்களுக்கு வேற யாரு இருக்கா என்று அழுததைக் கண்டு அந்தத் தாய்க்கு மனம் குளிர்ந்துவிட்டதாம்.

உடனே விவேக்கை கூப்பிட்டு ஜெயா நிர்வாகத்தை அப்படியே அனுராதா கையில் ஒப்படைக்கச் சொல்லிவிட்டாராம். இனிமேல் தினகரனுக்கு ஒரே ஜாலிதான். அவர் செய்திகள் நிறைய நிறைய வரும் என்கிறார்கள்.

ஆனால், பார்க்கத்தான் யாரும் இருக்க மாட்டார்கள்.