மயக்க மருந்து கொடுத்து கற்பழித்து விட்டார்! வீடியோ எடுத்து மிரட்டுகிறார்! தினகரன் கட்சி வேட்பாளர் மீது இளம்பெண் திடுக் புகார்!

பெரியகுளம் தொகுதியில் தினகரன் கட்சி வேட்பாளர் டாக்டர் கதிர்காமு மீது பெண் ஒருவர் பரபரப்பு பாலியல் புகார் கூறியுள்ளார்


தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு இன்று பெண் ஒருவர் வருகை தந்தார். நேராக காவல் நிலைய ஆய்வாளரை சந்தித்த அவர் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் சில ஆண்டுகளுக்கு முன்னர் டாக்டர் கதிர்காமு உடன் தனக்கு பழக்கம் ஏற்பட்டதாக அந்தப் பெண்மணி கூறியுள்ளார். ஒருநாள் தனக்கு மயக்க மருந்து கொடுத்து தன்னுடைய விருப்பம் இல்லாமல் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக கதிர்காமமு மீது அந்தப் பெண் பகீர் குற்றச் சாட்டை அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் பாலியல் பலாத்காரம் செய்த போது அதனை வீடியோவாக எடுத்து வைத்து தன்னை அவ்வப்போது மிரட்டி பாலியல் வல்லுறவு செய்ததாகவும் கதிர்காமு மீது அந்தப் பெண்மணி புகார் தெரிவித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் கதிர்காமு மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து கதிர்காமு தலைமறைவாகி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த கதிர்காமு தான் பெரியகுளம் தொகுதியில் தினகரனின் அமமுக சார்பில் வேட்பாளராக நிற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.