கைக் குழந்தைக்கு ஜலதோஷம் ஏற்பட்டால் தைலம் தடவலாமா?

இன்று எல்லா வீடுகளிலும் தலைவலி, ஜலதோஷம், உடல்வலியைக் குறைப்பதற்காக ஏகப்பட்ட தைலங்களை வாங்கி குவித்திருக்கிறார்கள். இவற்றை ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குப் பயன்படுத்தினால் வலிப்பு ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது என்று மருத்துவ ஆய்வு எச்சரிக்கை செய்கிறது.


சளி, ஜலதோஷம் ஏற்பட்டவுடன் குழந்தைகளின் உடல் முழுவதும் தைலம் தடவி ஒத்தடம் கொடுப்பது சகஜம். இது குழந்தைக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதை ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளார்கள் பெரும்பாலான தைலங்கள் ஐந்து வயதுக்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்துவதற்காகவே தயாராகிறது. மேலும் இவற்றில் கற்பூரம் ஒரு மூலப்பொருளாக பயன்படுகிறது. இது அளவுக்கு மீறும்போது குழந்தைக்கு வலிப்பு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனால் ஜலதோஷம், சளி போன்ற எந்த ஒரு உடல்நலக் குறைபாடு என்றாலும் மருத்துவர் ஆலோசனையில் மருந்து எடுத்துக்கொள்வதே நல்லது. மருத்துவர் ஆலோசனை இல்லாமல் ஒரு வயதுக்கு உட்பட்டவர்களுக்கு நிச்சயம் தைலம் தடவவே கூடாது.