இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் போட்டி நாளை தொடங்கவுள்ளளது.
ஆஸி.க்கு எதிரான முதல் ODI: தோனி விளையாடுவது சந்தேகம்.
இந்த போட்டியில் இந்திய அணியின் சீனியர் பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பருமான டோனி விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில் வலைப்பயிற்சியில் ஈடுபட்ட டோனியின் முழங்கையில் காயம் ஏற்பட்டுள்ளது.
இவருக்கு ஏற்பட்ட காயம் சிறிது தான். எனினும் மருத்துவர்கள் நாளை வழங்கும் அறிவுறுத்தலின் படியே அவர் நாளைய போட்டியில் விளையாடுவாரா இல்லையா என தெரிய வரும். ஒரு வேலை டோனி காயம் காரணமாக விளையாடாவிட்டால் அவருக்கு பதில் ரிஷாப் பாண்ட் அல்லது லோகேஷ் ராகுல் விக்கெட் கீப்பிங் செய்வார்கள் இன்று எதிர்பார்க்கப்படுகிறது.
விக்கெட் கீப்பிங்கை பொறுத்தவரை டோனியை எவராலும் ஈடு செய்ய முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. அனால் லோகேஷ் ராகுலை காட்டிலும் ரிஷாப் பணத்திற்கு சற்று அனுபவம் அதிகம் விக்கெட் கீப்பிங்கில். மேலும் இந்த தொடரிலிருந்து ஏற்கனவே ஹார்டிக் பாண்டியா காயம் காரணமாக விலகியுள்ளதால் அவருக்கு பதிலாக விஜய் ஷங்கர் மற்றும் ஜடேஜா இவர்களில் யார் களமிறங்குவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
விஜய் ஷங்கர் வேக பந்து வீச்சாளர் என்ற காரணத்தினால் அவர் அணியில் இடம்பெற சற்று வாய்ப்பு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட T20 தொடரை ஆஸ்திரேலியா 2-1அணி என்ற கணக்கில் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.