தொண்டையில் சிக்கிய சிக்கன் பீஸ்..! தொட்டிலிலேயே சடலமான 2 வயது குழந்தை! நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்!

இரவு தொட்டிலில் தூங்கி கொண்டிருந்த குழந்தை காலை இறந்தபடி கிடந்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்த சம்பவம் தர்மபுரி அருகே நேர்ந்துள்ளது.


தர்மபுரி மாவட்டம் தொப்பூர் பகுதியை சேர்ந்த சின்னதுரை மற்றும் மீனாட்சி தம்பதியினருக்கு ஆறு வயதில் அன்னபூரணி என்ற பெண் குழந்தையும், இரண்டு வயதில் தனுஸ்ரீ என்ற பெண் குழந்தையும் இருக்கின்றனர்.  

இந்நிலையில் இரவு அனைவரும் உணவருந்தி விட்டு தனுஸ்ரீயை தொட்டிலில் படுத்து தூங்க வைத்துவிட்டு மற்றவர்களும் உறங்கச் சென்றிருகின்றனர். காலை எழுந்து குழந்தைக்கு பால் கொடுக்க மீனாட்சி தனுஸ்ரீயை எழுப்பிய போது உடலில் எந்தவித அசைவும் இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.  

அப்போது பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ந்துபோன பெற்றோர், இறந்ததற்கான காரணம் என்ன என தெரிந்து கொள்ள பிரேத பரிசோதனை செய்தபோது சிறிய அளவிலான சிக்கன் துண்டு தொண்டையில் சிக்கிக் கொண்டு மூச்சுத் திணறி குழந்தை இறந்திருப்பது தெரிய வந்தது.  

பின்னர் விசாரித்தபோது இரவு அனைவரும் வீட்டில் சிக்கன் சமைத்து சாப்பிட்டு இருந்தது தெரியவந்தது. சிறிய தவறினால் குழந்தையைப் இழந்த சோகத்தில் குடும்பத்தினர் அனைவரும் இருக்கின்றனர்.