உடன் பிறந்த தம்பியுடன் நீச்சல் உடையில் ஊர் சுற்றும் தனுஷ் கதாநாயகி! வைரலாகும் புகைப்படங்கள்!

மும்பை: தனுஷ் படத்தில் நாயகியாக நடிக்க உள்ள சாரா அலி கான் பிகினி உடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


தனுஷ் நடிக்க உள்ள அட்ரங்கி ரே எனும் இந்தி படத்தில் அவருக்கு ஜோடியாக சாரா அலி கான் நடிக்க உள்ளார். இவர், பிரபல இந்தி நடிகர் சைஃப் அலி கானின் மகள் ஆவார். ஏற்கனவே சில இந்தி படங்களில் நடித்திருந்தாலும், சாரா நடிக்க உள்ள அட்ரங்கி ரே படம் மிகவும் கவனிக்கப்படுகிறது. இந்த படத்தில் அக்‌ஷய் குமாரும் நடிக்கிறார்.  

இந்நிலையில், சாரா அலி கான், இஸ்லாமிய மத கலாசாரத்தையும் மீறிய வகையில் பிகினி உடையில் ஒரு புகைப்படத்தை இணையத்தில்  வெளியிட்டுள்ளார். அதில், பிறந்த நாள் கொண்டாடும் தனது சகோதரனை கட்டிப்பிடித்தபடி பிகினி உடையில் சாரா நிற்பதை காண முடிகிறது. இந்த புகைப்படத்தை அவர் வெளியிட்டது முதலாக, நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இஸ்லாமிய பெண் ஒருவர் பொதுவெளியில் தனது சகோதரனை தழுவியபடி பிகினி உடையில் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டது மிகவும் கேவலமாக உள்ளது. இப்படி எல்லாம் செய்யலாமா, என்று பலரும் விமர்சித்துள்ளனர். ஆனால், சாரா செய்தது தவறில்லை. தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றபோது எடுத்த புகைப்படத்தை அவர் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

சினிமா படங்களில் இதைவிட ஆபாசமாக நடிப்பவர்களை விட்டுவிட்டு, சாதாரணமாக புகைப்படம் ஒன்றை பதிவிட்ட சாராவை ஏன் திட்டுகிறீர்கள், என்று சிலர் அவருக்கு ஆதரவாகவும் கமெண்ட் பகிர்கின்றனர். மொத்தத்தில், சாரா அலி கானின் இந்த புகைப்படம்தான் இன்ஸ்டாகிராமில் இப்போதைக்கு டிரெண்டிங் ஆக உள்ளது...