தேசக்கொடியை கீழே விழாமல் பாதுகாத்த தல தோணி!

இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது T20 போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோணி தனது காலில் விழவிருந்த இந்திய தேசிய கொடியை கையில் தூக்கி பிடித்து அவரின் தேசப்பற்றை வெளிக்காட்டியுள்ளார்.


இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது T20 போட்டியில் இந்திய அணி முதலில் பந்து வீசியது. இந்த போட்டியின் ஒரு ஓவரின் இடைவேளையில் மைதானத்தில் இருந்த ரசிகர் ஒருவர் தோணியை நோக்கி ஓடிவந்தார்.

அந்த ரசிகர் அவரின் கையில் இந்திய தேசிய கொடியை வைத்திருந்தார். வேகமாக வந்த ரசிகர் தோணியின் காலில் விழுந்தார். இதனால் அந்த ரசிகரின் கையிலிருந்த தேசிய கோடி தனது காலில் படவிருந்ததை அறிந்த தோணி தேசிய கோடியை தன் கையில் எடுத்து தனது தேசப்பற்றை வெளிப்படுத்தினார்.

பின்னர் அந்த ரசிகரிடமும் அறிவுரை கூறி அவரை அனுப்பிவைத்தார். தோணியின் தேசப்பற்றை வெளிப்படுத்தும் இந்த நிகழ்வானது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை தந்துள்ளது. மேலும் இந்த காட்சியானது இணையத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒரு T20 போட்டியில் நியூஸிலாந்து அணி இந்திய அணியை வென்று 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.