கடலில் இருந்து மேல்நோக்கி அருவி போல் எழுந்த தண்ணீர்..! காரணம் என்ன தெரியுமா? காண்போரை பிரமிக்க வைக்கும் வீடியோ உள்ளே..!

டென்மார்க்: செங்குத்தான பாறை மீது திடீரென கடல்நீர் மேலே ஏறிச் சென்ற காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.


டென்மார்க் அருகே அட்லாண்டிக் கடலில் உள்ளது ஃபரோ தீவுகள். இங்குள்ள கடற்கரைப் பகுதியில் சமி ஜேக்கப்சன் என்ற 41 வயது நபர் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் ஒரு விபரீத காட்சியை பார்த்தார். ஆம், அங்குள்ள செங்குத்தான பாறை மீது மோதிய கடல் நீரில் ஒரு பகுதி அப்படியே மெல்ல மெல்ல கயிறு போல மேலே ஏறிச் சென்றதை கண்டு அவர் வியப்படைந்தார்.

இதனை வீடியோவாக எடுத்து, அவர் வெளியிட தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக, கடல் நீர் மேல் நோக்கி ஏறிச் செல்வது வாய்ப்பில்லை என்றாலும், இது நீரில் ஏற்படும் காற்று சுழற்சியால் நிகழ்ந்த ஒன்று என, ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். சில நேரங்களில் நீரின் மேலே சுழன்று செல்லும் காற்றால் நீரின் மூலக்கூறுகள், சில நேரம் காற்றில் கலந்து, முழுமையாக ஆவியாகாமல் இவ்வாறு மேல் நோக்கி பயணம் செல்ல நேரிடுகிறது.

இது கிட்டத்தட்ட சாரல் போன்ற ஒரு நிகழ்வுதான், இது அரிதாக வீடியோவில் பதிவாகியுள்ளதாக, ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.