டெல்லி: மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் பேரில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
ஓடும் ரயிலில் போதை ஐஸ் க்ரீம்! ஆசையாக வாங்கிச் சாப்பிட்ட இளம் மாணவி! பிறகு நேர்ந்த விபரீத செயல்!
இதுதொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் ட்விட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், ''டெல்லி - ராஞ்சி இடையே செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் 2 நாள் முன்பாக பயணித்தபோது, அந்த ரயிலின் கேண்டீன் ஊழியர்கள் மற்றும் பயிற்சி நிலை டிக்கெட் பரிசோதகர் ஒன்று சேர்ந்து எனக்கு ஐஸ் கிரீமில் மயக்க மருந்து கலந்துகொடுத்தனர்.
இதில் மயக்கமடைந்த என்னை அவர்கள் பாலியல் தொல்லை செய்தனர். இதுபற்றி வழக்கு தொடர்ந்தால் எனது எதிர்காலம் சிக்கலாகும். அதனால்தான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளேன்.
இதன்பேரில், அந்த நபர்கள் மீது சம்பந்தப்பட்ட ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா,'' எனக் கேட்டு அந்த மாணவி கோரியிருந்தார்.
இதையடுத்து, அவரை இந்தியன் ரயில்வே அதிகாரிகள் தொலைபேசியில் தொடர்புகொண்டு வாக்குமூலம் பெற்றனர். இதன்பேரில், பயிற்சி நிலை டிக்கெட் பரிசோதகர் சரோஜ் மற்றும் கேண்டீன் உணவு விற்பனையாளர் உள்ளிட்டோரை சஸ்பெண்ட் செய்துள்ளனர்.