இன்று ஒரே நாளில் மூன்று மாநில கவர்னர்கள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க இருக்கிறார்கள். ஆம், தமிழ்நாடு, மேற்கு வங்காளம் மற்றும் ஆந்திர மாநில கவர்னர்களுக்குத்தான் அழைப்பு விடப்பட்டுள்ளது.
தமிழக கவர்னருக்கு டெல்லி அவசர அழைப்பு! எடப்பாடியை அலற வைக்கும் காரணம்!
ஜூலை மாதம் கவர்னர் மாற்றம் நடக்கலாம் என்று பேசப்படும் நிலையில், இந்த மீட்டிங் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இன்று மூன்று மாநில கவர்னர்களுக்கும் முக்கிய அசைன்மெண்ட் கொடுக்கப்பட உள்ளதாம். இவற்றை சிறப்பாக செயல்படுத்தினால், அவர்கள் தொடர்ந்து பதவியில் இருக்கலாம், இல்லையென்றால் மூட்டை முடுச்சுகளைக் கட்ட வேண்டியதுதான்.
இந்த மூன்று மாநிலங்களும் மோடிக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கின்றன. அதனால் மூன்று இடங்களிலும் தங்கள் வெற்றிக்கொடியை நிலைநாட்ட பா.ஜ.க. நினைக்கிறது. அதனால் மம்தாவுக்கு டார்ச்சர் கொடுக்கும் அளவுக்கு கலவரம், கொலை விவகாரங்களை எடுப்பதற்கு ஆலோசனை வழங்கப்படுமாம். அதேபோன்று அமராவதி நகர் கட்டியதில் சந்திரபாபு நாயுடுவின் ஊழல் விவகாரங்களை அப்பட்டமாக வெளிக்கொண்டு வருமாறு ஆந்திர கவர்னருக்குத் தேவையான வழிகாட்டுதல் வழங்கப்படுமாம்.
தமிழக கவர்னருக்கு தி.மு.க.வை மிரட்டும் வகையில் 2ஜி ஊழல் விவகாரம், சாதிக்பாட்சா கொலை வழக்கு போன்றவை மீண்டும் எடுக்கப்பட உள்ளது. அதுதவிர, பன்னீருக்கு சாதகமாக ஆட்சியை மாற்றும் திட்டமும் விவாதிக்கப்படும் என்கிறார்கள். தாமரை அரசியல் சூடு பிடிக்கிறது. இதைத் தாண்டி ஏழு பேர் விவகாரம், தி.மு.க. கொண்டுவரும் நம்பிக்கையில்லா தீர்மானம் போன்றவையும் அலசப்பட இருக்கிறதாம்.