குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதில் இருந்து எந்தக் காரணம் கொண்டும் பின்வாங்கப் போவதில்லை என்று பிரதமர் நரேந்திரமோடியும், உள்துறை அமைச்சர் அமீத் ஷாவும் மீண்டும் மீண்டும் உறுதிபட பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
அமீத் ஷாவை டெல்லி போராட்டக்காரர்கள் சந்திக்கப் போகிறார்களாம்..? என்னதான் நடக்கப் போகிறது?

இந்த நிலையில், டெல்லி ஷாஹின்பாக் போராளிகளின் ஒரு பகுதியினர் அமித்ஷாவுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்போகிறார்கள் என்றசெய்தி வந்திருக்கிறது. அமீத் ஷா அழைக்காத பட்சத்தில், போராளிகளே வலிந்து முன்சென்று பேச்சுவார்த்தை நடத்துவது எதற்கு என்று கேள்வி எழுந்துள்ளது.
ஏனென்றால் போராட்டக்காரர்கள் எதிர்பார்ப்பது, குடியுரிமைச் சட்டம் குப்பைத் தொட்டிக்குப் போக வேண்டும் என்பதைத்தான். ஆனால், போராட்டம் பற்றியோ அல்லது போராட்டக்காரர்களின் கோரிக்கை பற்றியோ எந்த கவலையும்படாத அமீத் ஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்துவதால் மட்டும் என்ன நிகழ்ந்துவிடப் போகிறது?
இப்போது ஷாஹின்பாக் மாதிரியான போராட்டங்கள் சென்னை, திருவனந்தபுரம் போன்ற இடங்களில் விரிவடைந்துவரும் நேரத்தில் மோடி அரசுதான் இறங்கிவந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமே தவிர, போராட்டக்காரர்கள் கெஞ்சக்கூடாது என்று சொல்லப்படுகிறது.