நிர்பயா வழக்கு! தயாரானது தூக்கு கயிறு..! தூக்கிலிடுபவரும் தயார்..! 16ந் தேதி நான்கு பேருக்கும் கடைசி நாள்!

டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் ஓடும் பேருந்தில் 6 நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளான அனைவருக்கும் விரைவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்திய தலைநகர் டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பஸ்சில் 6 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் நாடு முழுவதும் இந்த சம்பவத்தால் பெரும் புரட்சி வெடித்தது ஆங்காங்கே பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றன பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவரும் பள்ளி வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட பவன் குப்தா, வினய் சர்மா, அக்ஷய் குமார், முகேஷ் சிங், ராம் சிங், முகமது அப்ரோஸ் 6 பேரை டெல்லி போலீசார்  கைதுசெய்தனர்.

விசாரணையில் 6 பேரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் அறிவித்தது.6 பேரில் ஒருவர் சிறார் என்பதால் அவர் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மீதமுள்ள 5 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.  5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங், டெல்லி திகார் சிறையில் இருக்கும் போது   தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் மற்ற 4 பேர் கடுமையான பாதுகாப்பு தண்டனை அனுபவித்து வந்தனர். தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டனர். சுப்ரீம் கோர்ட்டு 4 பேரின்  தூக்கு தண்டனையை உறுதிசெய்தது. குற்றவாளிகளின் கருணை மனுவும் நிராகரிக்க்ப்பட்டது.

இதனால் தூக்குப் போட போவதாக வாரண்ட்டும் நீதிமன்றம் வழங்கியுள்ளது. சட்டப்படி கருணை மனு நிராகரிக்கப்பட்ட 14 நாட்களுக்குள் தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும். இதனால் 4 பேரும் டிச.,16 ம் தேதி தூக்கிலிடப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. அவர்களின் தூக்கு தண்டனை நிறைவேற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. தூக்கு தண்டனையை நிறைவேற்ற 2  பேர் உத்திரப்பிரதேச மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தை அறிந்த நிர்பயாவின் தாய் டிசம்பர் 16ஆம் தேதி அவர்களின் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டால் தனது மகளை ஆத்மா சாந்தி அடையும் என ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.