ஓயாமல் அடித்துக் கொண்டு 2 மனைவிகள்! ஆத்திரத்தில் சிங்கிள் கணவன் செய்த பயங்கரம்!

டெல்லி: மாறி மாறி சண்டை போட்ட 2 மனைவிகளையும் கணவனே கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


டெல்லியின் தெற்குப் பகுதியில் ஜாம்ஷெத் ஆலம் என்ற நபர் வசித்து வந்திருக்கிறார். பீகார் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட இவருக்கு, இஸ்மத் பர்வீன், ஜப்னா என 2 மனைவிகள் உள்ளனர். இந்நிலையில், சமீபத்தில், இவர்களுக்குள் குடும்ப சண்டை ஏற்பட்டுள்ளது. முதலில், கணவருடன்  சண்டையிட்ட மனைவிகள் 2 பேரும், பின்னர் தங்களுக்குள்ளேயே அடித்துக் கொள்ள தொடங்கியுள்ளனர்.

இதனை சமாதானம் செய்ய முயன்ற ஜாம்ஷெத் ஆலம் ஒருகட்டத்தில் கடும் ஆத்திரம் அடைந்துள்ளார். மனைவிகள் என்றும் பாராமல் 2 பேரையும் கழுத்தை நெரித்துக் கொன்ற ஜாம்ஷெத் ஆலம், பின்னர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதுபற்றி வழக்குப் பதிந்த டெல்லி போலீசார், தனது சொந்த ஊரில் பதுங்கியிருந்த ஆலமை நேரில் சென்று சுற்றி வளைத்து கைது செய்தனர்.

மனைவிகளின் சண்டையால் நிம்மதியை இழந்ததை அடுத்து, அவர்களை கொலை செய்ய நேரிட்டதாக, அந்த நபர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். நாட்டில் ஒரு மனைவி கட்டியவன் நிலையே திண்டாடும் நிலையில், 2 மனைவி கட்டினால் இதுதான் கதி என, சமூக ஊடகங்களில் இந்த நிகழ்வை பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.