அழகு நிலையத்தில் ஆன்லைன் விபச்சாரம்! மசாஜ் செய்வதாக மஜா!

ஸ்பா என்ற பெயரில் விபசாரம் நடத்தி வந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.


மே 21ம் தேதியன்று, டெல்லி போலீசாருக்கு, ஒரு தகவல் கிடைத்தது. அதாவது, போலீசின் அவசர உதவி எண்ணை தொடர்புகொண்ட ஒரு நபர் தன்னை பத்திரிகையாளர் என்று அறிமுகம் செய்துகொண்டிருக்கிறார். பின்னர் அவர், டெல்லியின் வடக்கே உள்ள ரோகிணி பகுதியில் உள்ள பிரபல மாலில் செயல்படும் ஸ்பா சென்டரில் விபசாரம் நடப்பதாகப் புகார் அளித்துள்ளார்.

அந்த சென்டருக்கு ஸ்பா செய்வதற்காக சென்றபோது, அங்கிருந்த 11 பெண்களும் தவறாக நடந்துகொண்டதாகவும், அவர்களுக்கு விலை பேசும் பணியில் ஸ்பா உரிமையாளர் ஈடுபட்டதாகவும், அந்த நபர் புகாரில் குறிப்பிட்டார்.

இதன்பேரில், அங்கு சென்று விசாரணை நடத்திய போலீசார், விபசாரம் நடந்ததை உறுதி செய்தனர். அங்கிருந்த பெண்கள் அனைவரும் மீட்கப்பட்டனர். அவர்களில் சிலர் நேபாளம் நாட்டைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. அதேசமயம், குறிப்பிட்ட ஸ்பாவின் உரிமையாளர் தலைமறைவாகிவிட்ட நிலையில், அவரை போலீசார் தேடிவருகின்றனர்.

ஆன்லைன் மூலமாக வாடிக்கையாளர்களை கவர்ந்து இங்கு மசாஜ் செய்வதாக அழைத்து விபச்சாரம் நடைபெற்றுள்ளது.